அசோகா ஹல்வா(ashoka halwa recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#cf2
குக் பாட் நண்பர்கள் மற்றும் அட்மின் களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்.💐எங்கள் வீட்டில் இந்த வருடம் தீபாவளி ஸ்பெஷல் அசோகா அல்வா. பொதுவாக அசோகா அல்வாவை பாசிப்பருப்பை வேகவைத்து செய்வார்கள். நான் பாசிப்பருப்பை நன்கு சிவக்க வறுத்து மிக்ஸியில் நைசாக அரைத்து, அதை சலித்து எடுத்துக் கொண்டேன். பிறகு கோதுமை மாவு சேர்த்து செய்தேன். விரைவில் செய்து முடித்து விட்டேன்.மிகவும் எளிதாகவும, அருமையான சுவையுடனும் இருந்தது.

அசோகா ஹல்வா(ashoka halwa recipe in tamil)

#cf2
குக் பாட் நண்பர்கள் மற்றும் அட்மின் களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்.💐எங்கள் வீட்டில் இந்த வருடம் தீபாவளி ஸ்பெஷல் அசோகா அல்வா. பொதுவாக அசோகா அல்வாவை பாசிப்பருப்பை வேகவைத்து செய்வார்கள். நான் பாசிப்பருப்பை நன்கு சிவக்க வறுத்து மிக்ஸியில் நைசாக அரைத்து, அதை சலித்து எடுத்துக் கொண்டேன். பிறகு கோதுமை மாவு சேர்த்து செய்தேன். விரைவில் செய்து முடித்து விட்டேன்.மிகவும் எளிதாகவும, அருமையான சுவையுடனும் இருந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
1 மீடியம் தட்டு
  1. 1/2கப் வறுத்து அரைத்த சலித்த பாசிப்பருப்பு மாவு
  2. 1/4கப் சலித்த கோதுமை மாவு
  3. 1.5 கப் சர்க்கரை
  4. 15 முந்திரி பருப்பு
  5. 1டேபிள்ஸ்பூன் உலர்ந்த திராட்சை
  6. 1டேபிள்ஸ்பூன் சாரைப்பருப்பு
  7. ஒரு டேபிள்ஸ்பூன்தேவையென்றால் பாதாம் மற்றும் பிஸ்தா பருப்பு தலா
  8. 1டீஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  9. 1/4டீஸ்பூன் குங்குமப்பூ
  10. 2டீஸ்பூன் பால்
  11. 1சிட்டிகை கேசரிப்பவுடர்
  12. 4 கப் தண்ணீர்
  13. 1.25 கப் நெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மேற்கூறிய அனைத்து வகையான பொருட்களையும் எடுத்து அருகில் வைத்துக் கொள்ளவும்.பாசிப்பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து மிக்ஸியில் நைஸாக அரைத்து கட்டி இல்லாமல் சலித்து 1/2 கப் எடுத்துக் கொள்ளவும். கால் கப் அளவு கோதுமை மாவை சலித்து எடுத்துக் கொள்ளவும்.நெய், முந்திரி பருப்பு, திராட்சை, சாரைப்பருப்பு மற்ற பருப்புகள் (அலங்கரிக்க) ஏலக்காய், கேசரி பவுடர் மற்றும் குங்குமப்பூ தயாராக எடுத்துக் கொள்ளவும். முந்திரி சாரை திராட்சையை நெய்யில் வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    இரண்டரை கப் தண்ணீரில் பாசிப்பருப்பு மாவை கட்டியில்லாமல் நன்கு கரைத்து வைத்துக் கொள்ளவும். மீதி ஒன்றரை கப் தண்ணீரில் கோதுமை மாவை கரைத்து கொள்ளவும். 2 டீஸ்பூன் பாலில் குங்குமப்பூவை ஊற வைத்துக் கொள்ளவும். ஒரு ஸ்பூன் தண்ணீரில் கேசரி பவுடரை கரைத்து வைத்துக் கொள்ளவும். நெய் மற்றும் சர்க்கரை தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும். ஏலக்காயை பவுடராக்கி கொள்ளவும்.

  3. 3

    இப்போது அரைத்த பாசிப்பருப்பு மாவை நெய் வறுத்த நான்ஸ்டிக் வாணலியில் ஊற்றி கொஞ்சம் கெட்டியாக வரும் வரை கைவிடாமல் கிளறவும். கொஞ்சம் கெட்டியா ஆன பிறகு அதில் கரைத்த கோதுமை மாவை ஊற்றி கட்டி இல்லாமல் கிளறிவிடவும். இவை மூன்று அல்லது நான்கு நிமிடம் கிளறி விட்டு கெட்டியாக ஆரம்பித்தவுடன் அதில் ஒன்றரை கப் சர்க்கரையை சேர்த்து நன்கு கைவிடாமல் கிளறவும். சர்க்கரை போட்டவுடன் மாவு நீர்க்க வரும். பிறகு கிளறக் கிளற கெட்டியாக ஆரம்பித்துவிடும். ஓரம் சிறிது ஒட்டாமல் வரும் வரை கிளறி விடவும். அதிக தீயில் கிளறவும்.

  4. 4

    இப்போது நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து கிளற ஆரம்பிக்கவும். முதல் முறை ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யை ஊற்றி கிளறவும். நெய் சுண்டியவுடன் மீண்டும் அதேபோல் இரண்டு மூன்றுமுறை நெய் உறிந்து கொள்ள உறிந்து கொள்ள கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கிளறி விட்டுக் கொண்டே இருக்கும். கைவிடாமல் கிளறவும்.

  5. 5

    கிளறக் கிளற நன்கு அல்வா திரண்டு சுருண்டு வரும்.அப்போது அதில் குங்குமப்பூ கேசரி பவுடர் மற்றும் பாதி அளவு முந்திரி பருப்பு கலவை சேர்த்து கலந்து விடவும். மீண்டும் நன்கு கிளறி விடவும். கரண்டியில் இருந்து மேல் எடுத்து ஊற்றும் போது லேயறாக ஊற்றும். தவாவில் ஒட்டாமல் நன்கு ஒன்று சேர்ந்தவுடன் ஏற்கனவே நெய் தடவிய தட்டில் இவற்றை ஊற்றி சமன் செய்யவும்.

  6. 6

    தட்டில் ஊற்றி பிறகு மீதி முந்திரிப் பருப்பு கலவையை நன்கு தூவி விடவும். நறுக்கிய பிஸ்தா பாதாம் பருப்பும் சேர்க்கலாம்.கொஞ்சம் லேசாக தேவை என்றால் குங்குமப்பூவை தூவி விடலாம். பிறகு நெய் தடவிய கரண்டியில் அல்வாவை சமன்படுத்தி விடவும். ஒரு மணி நேரத்துக்கு மேல் நன்கு ஆறவிடவும். பிறகு கத்திக் கொண்டு தங்களுக்குத் தேவையான அளவுகளில் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். சுவையான அசோகா அல்வா தீபாவளியை கொண்டாட எங்கள் வீட்டில் தயார்.முக்கால் கப் மாவு(2 மாவுகளும்) அளவுக்கு மீடியம் சைஸ் தட்ட அளவு ஹல்வா வந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes