சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)

Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056

#pooja சக்கரை பொங்கலை நான் என் அலுவலக ஆயுத பூஜைக்காக படைப்பதற்கு செய்துள்ளேன்.

சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)

#pooja சக்கரை பொங்கலை நான் என் அலுவலக ஆயுத பூஜைக்காக படைப்பதற்கு செய்துள்ளேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி 15 நிமிடம
8பேர்
  1. 2 கப் பச்சரிசி
  2. 1/2 கப் பாசிப்பருப்பு
  3. 2 கப் வெல்லம்
  4. 10 முந்திரி
  5. 10 திராட்சை
  6. 1 ஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  7. 1 மூடி தேங்காய் துருவியது
  8. 100 கிராம் நெய்

சமையல் குறிப்புகள்

1 மணி 15 நிமிடம
  1. 1

    அரிசியையும் பருப்பையும் குக்கரில் சேர்த்து மூன்று முறை கழுவி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு 8 டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி ஐந்து விசில் வரும் வரை வேக வைக்கவும்.

  2. 2

    வெள்ளத்தை நன்றாக உதிரி உதிரியாக உடைத்து ஒரு பாத்திரத்தில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதி வந்தவுடன் வேகவைத்த அரிசி மற்றும் பருப்புடன் ஊற்றி கலக்கவும்.

  3. 3

    அதன் பின் அரைத்து வைத்துள்ள ஏலக்காய் பொடியையும், துருவிய தேங்காயையும். சேர்க்கவும்.அனைத்தும் ஒன்று திரண்டு வரும் வரை நன்றாக கிளரவும். அடுத்து நெய் சேர்த்து கிளறவும்.

  4. 4

    தாளிக்கும் கரண்டியில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி உடைத்த முந்திரியை முதலில் போட்டு சிவக்க ஆரம்பிக்கும் பொழுது உலர்திராட்சையை யும் சேர்த்து பொன்னிறமானதும் எடுத்து பொங்கலில் சேர்த்து கிளறவும்.

  5. 5

    அதன்பின் பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056
அன்று

Similar Recipes