எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
4 நபர்கள்
  1. வேகவைத்த ஸ்வீட் கார்ன் ஒரு கப்
  2. ஒரு டேபிள்ஸ்பூன்நெய்
  3. ஒரு டேபிள்ஸ்பூன்சமையல் எண்ணெய்
  4. பெரிய வெங்காயம்-2
  5. ஒரு ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  6. சிறியதக்காளி நான்கு
  7. முந்திரி 15
  8. ஒரு டேபிள் ஸ்பூன்தர்பூசணி விதை
  9. கொத்தமல்லித்தழை ஒரு ஸ்பூன்
  10. ஒரு டேபிள் ஸ்பூன்காய்ந்த மிளகாய் விழுது
  11. 1 1/2அரை டீஸ்பூன்தனியா பொடி
  12. மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்
  13. கரம் மசாலா பொடி ஒரு டீஸ்பூன்
  14. சீரகப் பொடி அரை டீஸ்பூன்
  15. கால் டீஸ்பூன்மிளகாய்த்தூள்
  16. கஸ்தூரி மேத்தி அரை டேபிள்ஸ்பூன்
  17. உப்பு தேவையான அளவு
  18. தண்ணீர் அரை கப்
  19. 2 டேபிள்ஸ்பூன்துருவிய பன்னீர்
  20. 3 டேபிள்ஸ்பூன்(mava)கோவா
  21. துருவிய சீஸ் ஒரு டேபிள்ஸ்பூன்
  22. நிலக்கரி charcoal 1
  23. முட்டைக்கோஸின் இலை ஒன்று

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    முதலில் கடாயில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்

  2. 2

    வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்

  3. 3

    சப்ஜி செய்யும் பொழுதே பக்கத்து அடுப்பில் charcoal ஒன்றை வைத்து ஆன் பண்ணவும்

  4. 4

    இஞ்சி பூண்டு விழுது நன்றாக வாசனை போனபின்பு அதனுடன் தக்காளி சேர்த்து மசிய வதக்கவும்.

  5. 5

    பின்பு மிளகாய் விழுதை சேர்த்து வதக்கவும்

  6. 6

    பின்பு எல்லா பொடி வகைகளையும் சேர்க்கவும். மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள், தனியாத்தூள்,கரம் மசாலா தூள்,சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்.உப்பு சேர்க்கவும்

  7. 7

    நன்றாக வதங்கிய பின்பு வேகவைத்த ஸ்வீட் கார்ன் சேர்க்கவும்

  8. 8

    தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்

  9. 9

    இதனுடன் முந்திரி தர்பூசணி விதை அரைத்த விழுது, கோவா, துருவிய பனீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

  10. 10

    பின்பு ஒரு சிறிய கோஸ் இலையை எடுத்து கிரேவியில் நடுவில் வைக்கவும்

  11. 11

    Charcoal ஐ எடுத்து முட்டைக்கோஸ் இலையின் மீது வைக்கவும்.

  12. 12

    Charcoal ஐ வைத்த உடனே அதன் மீது ஒரு ஸ்பூன் நெய் விடவும். உடனே ஒரு தட்டை போட்டு மூடி விடவும்.

  13. 13

    ஒரு நிமிடம் கழித்து மூடியை திறந்து சார்கோல் மற்றும் கோஸ் இலையை எடுத்து விடவும்

  14. 14

    பின்பு கஸ்தூரி மேத்தி,துருவிய சீஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.

  15. 15

    கடைசியாக மல்லி இலை தூவி பரிமாறவும்

  16. 16

    குறிப்பு :உங்களுக்கு விருப்பம் என்றால் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம் நான் சேர்க்கவில்லை.

  17. 17

    ரொட்டி மற்றும் நான் புல்கா இவைகளுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும் இந்த ஸ்வீட் கார்ன் சப்ஜி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shanthi Balasubaramaniyam
அன்று

Similar Recipes