ரவா லட்டு (Rava Laddu recipe in Tamil)

kavi murali
kavi murali @kavimurali_cook
Chennai

#Deepavali
#kids1

* தீபாவளி என்றாலே இனிப்பு பலகாரங்கள் தான் அதில் மிக எளிதாக செய்யக்கூடியது இந்த ரவா லட்டு.

*எங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியது.

ரவா லட்டு (Rava Laddu recipe in Tamil)

#Deepavali
#kids1

* தீபாவளி என்றாலே இனிப்பு பலகாரங்கள் தான் அதில் மிக எளிதாக செய்யக்கூடியது இந்த ரவா லட்டு.

*எங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2-4பரிமாறுவது
  1. 1 கப் ரவை
  2. 1 கப் சர்க்கரை
  3. 10 முந்திரிப்பருப்புகள்
  4. 8திராட்சை
  5. மூன்று ஏலக்காய்
  6. 1/4 கப் நெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    கொடுத்துள்ள பொருட்களை சரியான அளவுகளில் எடுத்து வைத்துக்கொள்ளவும் முந்திரியை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு கடாயை சூடு ஏற்றி குறைவான தீயில் வைத்து சிறிது நெய் சேர்த்து ரவையை 2-3 நிமிடங்கள் வறுத்துக் கொண்டு அதை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.

  2. 2

    அதே கடாயில் 2 டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி முந்திரி திராட்சை மற்றும் ஏலக்காய் தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    ஒரு மிக்ஸி ஜாரில் ஆற வைத்து ரவையை சேர்த்து சிறிது கரகரப்பாக அரைத்து எடுத்துப் பின் சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

  4. 4

    ஒரு அகலமான பாத்திரம் அல்லது அதே கடாயை வைத்து பொடித்துள்ள ரவை, சர்க்கரை மற்றும் வறுத்துள்ள முந்திரி திராட்சை சேர்த்து நெய் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும். தேவைப்பட்டால் மேலும் நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

  5. 5

    இதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி முந்திரியை வைத்து அலங்கரித்தால் சுவையான ரவா லட்டு தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
kavi murali
kavi murali @kavimurali_cook
அன்று
Chennai
வானவில்தோன்றும் போதுவானம் அழகாகிறதுநம்பிக்கைதோன்றும் போதுவாழ்க்கை அழகாகிறது...
மேலும் படிக்க

Similar Recipes