ஸீடீம் சுழியம்

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
சென்னை

பாரம்பரியமான சுழியம், எண்ணெயில் பொரித்து எடுப்பர் . இது ஆவியில் வேகவைத்து எடுத்தும் சாப்பிடலாம். அருமையான சுவை.

ஸீடீம் சுழியம்

பாரம்பரியமான சுழியம், எண்ணெயில் பொரித்து எடுப்பர் . இது ஆவியில் வேகவைத்து எடுத்தும் சாப்பிடலாம். அருமையான சுவை.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
2பேர்
  1. 1கப் கடலைப்பருப்பு
  2. 1/2கப் தேங்காய் துருவல்
  3. 1கப் வெல்லம்
  4. 1/2டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  5. 3/4கப் மைதா மாவு
  6. 3டீஸ்பூன் அரிசி மாவு
  7. உப்பு

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    கடலை பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, வேகவைத்து, தனியாக மசித்துகொள்ளவும்.

  2. 2

    தேங்காய் துருவல் துருவி கொள்ளவும். வெல்லத்தில் தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்து கரைத்து கொள்ளவும்.

  3. 3

    ஒரு வாணலியில் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும். பின் கடலை பருப்பு, வெல்லத்தை வடிகட்டி அதில் சேர்த்து வதக்கவும். கெட்டியாக ஆகும் வரை வதக்கவும். அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுக்கவும்.

  4. 4

    பின் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு,உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும். அந்த கடலை பருப்பு கலவையை இதில் நனைத்து, தனியே வைக்கவும்.

  5. 5

    அதனை ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
அன்று
சென்னை

Similar Recipes