காலிஃபிளவர் தொக்கு- (Cauliflower thokku recipe in tamil)

karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232

#GA4
காலிஃபிளவர் - எங்கள் பகுதி சைவ விருந்து ஒன்றில் சுவைத்த இந்த காலிஃப்ளவர் தொக்கு சுவை மாறாமல் இந்த பதிவில் காண்போம்.......

காலிஃபிளவர் தொக்கு- (Cauliflower thokku recipe in tamil)

#GA4
காலிஃபிளவர் - எங்கள் பகுதி சைவ விருந்து ஒன்றில் சுவைத்த இந்த காலிஃப்ளவர் தொக்கு சுவை மாறாமல் இந்த பதிவில் காண்போம்.......

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்களுக்கு
  1. 5 ஸ்பூன் நல்லெண்ணெய்
  2. 3/4 கிலோ காலிஃபிளவர்
  3. 100 கிராம் சின்ன வெங்காயம்
  4. கருவேப்பிலை சிறிது
  5. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  7. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  8. 1/2 ஸ்பூன் கரம் மசாலா
  9. உப்பு தேவையான அளவு
  10. 1/4 கப் தேங்காய் விழுது

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    வெந்நீரில் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து காலிஃபிளவரை பொடியாக நறுக்கி 5 நிமிடம் போட்டு வைத்து பின்னர் 4-5 முறை கழுவி சுத்தம் செய்யவும்...

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு கறிவேப்பிலை சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்...

  3. 3

    இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.

  4. 4

    மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும்.சிறிய தீயில்.....

  5. 5

    நன்கு வதக்கிய பின்பு சுத்தம் செய்த காலிஃப்ளவரை சேர்த்து வதக்கவும்.

  6. 6

    அளவான தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்.

  7. 7

    தண்ணீர் வற்றிய பின்பு தேங்காய் விழுதை சேர்த்து நன்கு வதக்கி காலிஃப்ளவர் உடன் ஒட்டி வரும் வரை வதக்கவும்.....

  8. 8

    எண்ணெய் பிரிந்து வரும் பொழுது இறக்கினால் சுவையான காலிஃப்ளவர் தொக்கு தயார்....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232
அன்று

Similar Recipes