சில்லி டோமடோ ரசம் (Chilli tomato rasam recipe in tamil)

ARP. Doss
ARP. Doss @cook_21334547

#GA4 கோல்டன் ஆப்ரான் போட்டியில் சில்லி என்ற வார்த்தையை வைத்து இந்த ரசம் செய்யப்பட்டிருக்கிறது இதில் புளியோ காஞ்சனாவை சேர்க்கவில்லை மற்றும் உடம்புக்கு மிகவும் நல்லது இந்த ரசம் ஒரு முறை செய்து பார்க்கலாம் வாங்க செய்முறை காணலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 4தக்காளி
  2. 1 டீஸ்பூன் முழு சீரகம்
  3. 1 /2 டீஸ்பூன் சீரகத்தூள்
  4. 5 பச்சைமிளகாய்
  5. 20 கிராம் பூண்டு
  6. உப்பு தேவையான அளவு
  7. கடுகு உளுத்தம்பருப்பு சிறிதளவு
  8. தண்ணீர் தேவையான அளவு
  9. எண்ணெய் தேவையான அளவு
  10. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  11. கருவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு
  12. சிறியதுண்டு பெருங்காயம்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் மிக்ஸி ஜாரில் பூண்டை உரித்து சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் நறுக்கிய தக்காளியையும் சேர்த்து கொள்ளவும்.

  2. 2

    இரண்டையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாயை நடுவில் கீறி எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    அடுப்பை பற்ற வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு சேர்த்து நன்றாக பொரிந்தவுடன் அதனுடன் பெருங்காயத் துண்டு சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும்.அதனுடன் முழு சீரகம் 1 டீஸ்பூன் அளவு சேர்த்து எல்லாம் நன்கு பொரிந்தவுடன் அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதை சேர்த்து விடவும்.

  4. 4

    இப்பொழுது அதில் தேவையான அளவு தண்ணீர் விட்டு மஞ்சள்தூள் சீரகத்தூள் உப்பு சேர்த்து கலந்து விட்டு மூடி வைக்கவும்

  5. 5

    ஒரு கொதி வந்தவுடன் கறிவேப்பிலை கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான சில்லி டோமடோ ரசம் தயார் ஆகிவிட்டது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ARP. Doss
ARP. Doss @cook_21334547
அன்று

Similar Recipes