எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30-40 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 4 சிக்கன் கால்
  2. 2 முட்டை
  3. 1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  4. 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  5. 1 டீஸ்பூன் கரம் மசாலா
  6. 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  7. உப்பு
  8. 2 டேபிள்ஸ்பூன் கெட்டி தயிர்
  9. 4 டேபிள்ஸ்பூன் மைதா மாவு
  10. 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு
  11. சிறிதுகறிவேப்பிலை
  12. எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

30-40 நிமிடங்கள்
  1. 1

    சிக்கனின் கால் பகுதியை நன்றாக கழுவி படத்தில் காட்டியவாறு இரண்டு பக்கமும் கீறி கொள்ளவும் பிறகு ஒரு பௌலில் முட்டை, இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்

  2. 2

    இத்துடன் மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூளும் சேர்க்கவும்

  3. 3

    உப்பு, தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

  4. 4

    சிக்கனின் கால்களை இதில் சேர்த்து நன்றாகக் கொதித்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.. மைதா, சோள மாவு சேர்த்து நன்றாகக் கலந்து மீண்டும் 30 நிமிடம் வைக்கவும்

  5. 5

    கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மிதமான தீயில் சிக்கன் கால்களை சேர்த்து பொரித்தெடுக்கவும் சிக்கன் வெந்த பிறகு இதில் கருவேப்பிலை சிறிது சேர்த்து இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வேகும் வரை மிதமான தீயில் வைக்கவும்

  6. 6

    சிக்கன் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்

  7. 7

    அட்டகாசமான சிக்கன் டிரம்ஸ்டிக் தயார் நீங்களும் இதனை முயற்சித்துப் பாருங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes