மணத்தக்காளி கீரை பொரியல்🌿🌿🌿

Nithyavijay
Nithyavijay @cook_24440782
Coimbatore

#GA4 #week15( herbal) மணத்தக்காளி இலைச் சாற்றை35மிலி வீதம் நாள்தோறும் மூன்று வேளைகள் உட்கொண்டு வந்தால் சிறுநீரை பெருக்கும்; உடலில் நீர் கோர்த்து ஏற்படும் வீக்கம் ,உடல் வெப்பம் ஆகியவற்றை குணப்படுத்தும்.மணத்தக்காளி கீரை வாய்ப்புண்களை குணமாக்கும்அருமருந்து.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. மணத்தக்காளி கீரை -1கட்டு
  2. சின்ன வெங்காயம் -20
  3. வர மிளகாய்-5
  4. கருவேப்பிலை- சிறிதளவு
  5. கடுகு உளுந்தம் பருப்பு-1 தேக்கரண்டி
  6. கடலைப்பருப்பு -1தேக்கரண்டி
  7. எண்ணெய் -தேவையான அளவு
  8. உப்பு -தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் கீரையை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு,கடலைப் பருப்பு,வரமிளகாய்,கருவேப்பிலை,பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக்கொள்ளவும்.நன்கு வதங்கிய பிறகு நறுக்கி வைத்துள்ள கீரையை சேர்த்து அதனுடன் உப்பு சேர்த்து வதக்கவும்.

  2. 2

    நன்கு வதங்கிய பிறகு தேங்காய் துருவலை சேர்த்து இறக்கினால் ஆரோக்கியமான மணத்தக்காளிக்கீரை பொரியல் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Nithyavijay
Nithyavijay @cook_24440782
அன்று
Coimbatore

Similar Recipes