மணத்தக்காளி வத்தல் பொடி (Mnathakkali vathal podi recipe in tamil)

Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
Sharjah

மணத்தக்காளி வத்தல் மற்றும் சுண்டைக்காய். நம் உடலில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் ஆகிய மூன்றையும் கட்டுப்படுத்தும். வாயு தொல்லை, வயிறுப் பொருமல் , முதலிய பிரச்சனைகள் மணத்தக்காளி வத்தல் சுண்டக்காய் பொடியை எடுப்பதன் மூலம் குணமடையும். அன்றாட உணவில் ஒரு டீஸ்பூன் இப்பொடியை சாதத்துடன் கலந்து நெய் சேர்த்து அல்லது நல்லெண்ணெய் சேர்த்து ஒரு உருண்டை சாப்பிட்டால் வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறிடும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
ஐந்து பேர்
  1. ஒரு கப்மணத்தக்காளி வத்தல்
  2. கால் கப்சுண்டைக்காய் வத்தல்
  3. 2 டேபிள் ஸ்பூன்மிளகு
  4. 1 டேபிள் ஸ்பூன்சீரகம்
  5. உப்பு தேவையான அளவு
  6. நான்கு அல்லது ஆறுவர மிளகாய்
  7. அரை டீஸ்பூன்பெருங்காயத்தூள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    மணத்தக்காளி வற்றலை சுத்தப்படுத்தி வாணலியில் மிதமான தீயில் வைத்து எண்ணெய் இல்லாமல் வறுத்து எடுக்கவும்.

  2. 2

    சுண்டை காயையும் எண்ணையில்லாமல் வறுத்தெடுக்கவும். மிளகு சீரகம் வரமிளகாய் அதனுடன் பெருங்காயம் சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் வறுத்து எடுக்கவும்.

  3. 3

    ஆற வைத்த பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக அரைத்து எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
அன்று
Sharjah

Similar Recipes