அத்திப்பழச்சாறு(Fig Fruit Shake recipe in Tamil)

kavi murali
kavi murali @kavimurali_cook
Chennai

#GA4/Jaggary/Week 15

*அத்திப் பழம் மருத்துவ குணங்கள் நிறைந்த பழமாகும். குறிப்பாக, சர்க்கரை நோய், உடல் வீக்கம், மற்றும் நமைச்சல் போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.

*வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் வெல்லத்தை பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரித்து, ஞாபக மறதியை தடுக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 4 அத்தி பழம்
  2. 2 டேபிள் ஸ்பூன் வெல்லம்
  3. 1 1/2 டம்ளர் பால்
  4. சர்க்கரை அலங்கரிக்க

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    அத்திப் பழத்தை நன்கு கழுவி தோல் உரித்து இரண்டாக நறுக்கி மிக்சி ஜாரில் போட்டு அதனுடன் தேவையான அளவு வெல்லம் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    இதனுடன் பால் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது ஐஸ் கட்டிகளை சேர்த்து மீண்டும் நன்கு நுரை வரும் வரை அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    இப்பொழுது அத்திப்பழச்சாறை கண்ணாடி கிளாஸில் ஊற்றி மேலே வெல்லம் தூளைத் தூவி அத்தி பழம் மற்றும் சர்க்கரை வைத்து (படத்தில் இருப்பது போல்)அலங்கரித்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி குடிக்கக் கூடிய சத்தான மற்றும் சுவையான அத்திப்பழச்சாறு தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
kavi murali
kavi murali @kavimurali_cook
அன்று
Chennai
வானவில்தோன்றும் போதுவானம் அழகாகிறதுநம்பிக்கைதோன்றும் போதுவாழ்க்கை அழகாகிறது...
மேலும் படிக்க

Similar Recipes