சோள மாவு குழிப்பணியாரம் (Sola maavu Kuli Paniyaram Recipe in Tamil)

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555

#GA4#week16.jowar recipe.
சோள மாவில் எண்ணிலடங்கா ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன சோளமாவு சாப்பிடுவதனால் நல்ல கொழுப்புகள் உருவாக்கப்படுகின்றன கெட்ட கொழுப்புகள் குறையும் சோள மாவு அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்

சோள மாவு குழிப்பணியாரம் (Sola maavu Kuli Paniyaram Recipe in Tamil)

#GA4#week16.jowar recipe.
சோள மாவில் எண்ணிலடங்கா ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன சோளமாவு சாப்பிடுவதனால் நல்ல கொழுப்புகள் உருவாக்கப்படுகின்றன கெட்ட கொழுப்புகள் குறையும் சோள மாவு அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
5 பேர்
  1. ஒரு கப்சோள மாவு
  2. கால் கப் வெல்லம்
  3. ஒரு துண்டு தேங்காய்
  4. 3ஏலக்காய்
  5. ஒன்றுமுட்டை

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    தேவையான பொருள்கள்

  2. 2

    முதலில் ஒரு பாத்திரத்தில் வெல்லம் ஏலக்காய் சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி கொள்ள வேண்டும்.

  3. 3

    ஒரு பாத்திரத்தில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கவேண்டும் பின் நாம் எடுத்து வைத்துள்ள சோள மாவை சேர்த்துக் கலக்கவும்.

  4. 4

    ஏற்கனவே நாம் செய்து வைத்த வெல்லப்பாகை அதனுடன் வடிகட்டி சேர்த்துக் கிளற வேண்டும்.

  5. 5

    ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு துண்டு தேங்காய் 3 ஏலக்காய் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்து எடுக்க வேண்டும்.

  6. 6

    இக்கலவையை ஒரு குழிப்பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றிமாவை ஒவ்வொரு குழியிலும் ஊற்ற வேண்டும் அதன் மேல் எண்ணெய் ஊற்ற வேண்டும்.

  7. 7

    மாவு ஒரு பக்கம் நன்றாக வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு எடுக்கவும் இப்போது சுவையான சோள மாவு குழி பணியாரம் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555
அன்று

Similar Recipes