சோள ரவை கிச்சடி(Jowar Rava khichdi recipe in tamil)

Senthamarai Balasubramaniam
Senthamarai Balasubramaniam @cook_24912331

சோளத்தில் நிறைய நார்ச்சத்து உள்ளது மருத்துவ குணம் அடங்கியுள்ளது எலும்புகள் வலிமை பெறவும் எலும்புகள் தேய்மானத்தை தடுக்கவும் சோளம் பெரிதும் உதவுகிறது வாரம் ஒரு முறை சோளத்தை நம் உணவில் சேர்த்து நம் குடும்பத்தை ஆரோக்கியமாக வைத்திருப்போம். #GA4/week 16/Jowar/

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்
  1. 200 கிராம் சோளம்
  2. 10 சாம்பார் வெங்காயம்
  3. 1 கேரட்
  4. 3 பச்சை மிளகாய்
  5. உரித்த பச்சைப் பட்டாணி சிறிதளவு
  6. இஞ்சி சிறிதளவு
  7. உப்பு தேவையான அளவு
  8. 5 பீன்ஸ்
  9. தேவையானஅளவு எண்ணெய்
  10. கடுகு உளுத்தம்பருப்பு சிறிதளவு
  11. கருவேப்பிலை சிறிதளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    சோளத்தை ஒரு கடாயில் போட்டு லேசாக வறுக்கவும் ஆறியபின் மிக்ஸியில் போட்டு ரவை பதத்திற்கு உடைத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    ,. வெங்காயம், இஞ்சி பச்சை மிளகாய், கேரட்,பீன்ஸ் ஆகியவற்றை கட் பண்ணி வைக்கவும். கடாயை அடுப்பில் ஏற்றி சூடானதும் எண்ணெய்ஊற்றி கடுகு உளுந்தம்பருப்பு போட்டு பொரிந்ததும் கட் பண்ணி வைத்துள்ள காய்கறிகள் பட்டாணி கருவேப்பிலை போட்டு வதக்கவும் சிறிது வதங்கியதும் 500 மில்லி தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்

  3. 3

    ஐந்து நிமிடங்கள் தண்ணீர் கொதித்து காய்கறிகள் வெந்ததும் சோள ரவையை தூவி கரண்டியால் கிளறவும். நன்றாக வெந்து கிச்சடி பதத்திற்கு வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடங்கள் கழித்து அணைக்கவும் இப்போது சோள ரவா கிச்சடி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Senthamarai Balasubramaniam
அன்று

Similar Recipes