வெஜிடபிள் ஃப்ரைட்ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#noodles

காய்கறிகளை அதிக அளவில் சேர்த்து மிதமான மசாலா உடன் இந்த ஃப்ரைட்ரைஸ் சுவையாக இருக்கும்

வெஜிடபிள் ஃப்ரைட்ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)

#noodles

காய்கறிகளை அதிக அளவில் சேர்த்து மிதமான மசாலா உடன் இந்த ஃப்ரைட்ரைஸ் சுவையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
8 பரிமாறுவது
  1. 2 கப் பாஸ்மதி அரிசி
  2. 8 கப் தண்ணீர்
  3. 2 ஸ்பூன் நெய்
  4. 1பிரியாணி இலை
  5. 2கிராம்பு
  6. 2ஏலக்காய்
  7. 4கேரட்
  8. 15பீன்ஸ்
  9. 1/2 கப் பச்சை பட்டாணி
  10. 4பெரிய வெங்காயம்
  11. 6 பச்சைமிளகாய்
  12. 2 ஸ்பூன் சோயா சாஸ்
  13. 2 ஸ்பூன் டொமேட்டோ சாஸ்
  14. 1_1/2 ஸ்பூன் சில்லி சாஸ்
  15. 1 டேபிள்ஸ்பூன் வெள்ளை மிளகுத்தூள்
  16. 1/2 ஸ்பூன் சோம்பு
  17. 1 கைப்பிடி அளவு ஸ்பிரிங் ஆனியன்
  18. 1கைப்பிடி அளவு புதினா இலை
  19. உப்பு தேவையான அளவு
  20. எண்ணெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    அரிசி ஐ அளந்து 2 முறை கழுவி வடிகட்டி பின் தண்ணீர் ஊற்றி 30 நிமிடங்கள் வரை ஊறவிடவும் பின் கொதிக்கும் நீரில் போடவும்

  2. 2

    பின் நெய் விட்டு சூடானதும் பிரியாணி இலை கிராம்பு ஏலக்காய் சேர்த்து வதக்கி அரிசி உடன் சேர்த்து நன்கு கிளறவும் 15 நிமிடங்கள் வரை வேகவிட்டு இந்த பதத்தில் இருக்க வேண்டும்

  3. 3

    பின் இறக்கி வடிகட்டி தாம்பாளத்தில் பரப்பி மேலே 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கலந்து கொள்ளவும் காய்கறிகளை மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும் மைக்ரோவேவ் அவனில் 2 நிமிடங்கள் வரை வேகவிட்டு எடுக்கவும் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சோம்பு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்

  4. 4

    பின் பொடியாக நறுக்கிய புதினா இலை சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து வதக்கவும் பின் சோயா சாஸ் ஊற்றவும்

  5. 5

    பின் தக்காளி சாஸ் சில்லி சாஸ் சேர்த்து நன்கு வதக்கவும்

  6. 6

    பின் வடித்த சாதம் சேர்த்து வெள்ளை மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்

  7. 7

    சுவையான வெஜிடபிள் ஃப்ரைட்ரைஸ் ரெடி ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து அலங்கரித்து சூடாக பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes