மட்டன் ஈரல் கிரேவி (Mutton eeral gravy recipe in tamil)

Anus Cooking
Anus Cooking @cook_28240002
coimbatore

#nv சாதம் , இட்லி , தோசை, ஆப்பம், சப்பாத்தி, பூரி என பல வகை உணவுகளுடன் மட்டன் ஈரல் கிரேவி சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். பெரியவர்களும் , குழந்தைகள் விரும்பி உண்பர் .

மட்டன் ஈரல் கிரேவி (Mutton eeral gravy recipe in tamil)

#nv சாதம் , இட்லி , தோசை, ஆப்பம், சப்பாத்தி, பூரி என பல வகை உணவுகளுடன் மட்டன் ஈரல் கிரேவி சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். பெரியவர்களும் , குழந்தைகள் விரும்பி உண்பர் .

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
  1. 150கிராம் ஆட்டு ஈரல்
  2. 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  3. 8சின்ன வெங்காயம்
  4. கறிவேப்பில்லை,கொத்தமல்லி இலை
  5. 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
  6. 1ஸ்பூன் மிளகு தூள்
  7. 1ஸ்பூன்தனியா தூள்
  8. 1/2ஸ்பூன் சீரக தூள்
  9. 2டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  10. தண்ணீர்
  11. உப்பு
  12. 1தக்காளி
  13. 1/2ஸ்பூன் கடுகு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    பாத்திரத்தில், மட்டன் ஈரலை சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். பிரஷர் குக்கர்'ரில் எண்ணெய் ஊற்றி,கடுகு,கறிவேப்பில்லை, நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.

  2. 2

    பச்சை வாசனை போனபின் மஞ்சள் தூள்,தனியா தூள்,சீரக தூள்,மிளகு தூள் சேர்த்து கிளறவும். அடுத்து ஈரலை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கர் மூடி 4 விசில் வரும் வரை மிதமான தீயில் வேகவிடவும்.

  3. 3

    இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும்.
    அருமையான மட்டன் ஈரல் கிரேவி தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Anus Cooking
Anus Cooking @cook_28240002
அன்று
coimbatore

Top Search in

Similar Recipes