செட்டிநாடு கதம்ப சாம்பார் (Chettinad kathamba sambar recipe in tamil)

karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232

#GA4
அனைத்துவித நாட்டுக் காய்கறிகள் பயன்படுத்தி ஆரோக்கியமான சாம்பார் செய்யும் முறையை இங்கு விரிவாக காண்போம்.....

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  1. 50 கிராம் உடைத்த பாசிப்பருப்பு
  2. 100 கிராம் துவரம் பருப்பு
  3. 2தக்காளி
  4. 10 சின்ன வெங்காயம்
  5. 7 பல் பூண்டு
  6. 1கைப்பிடி மல்லி இலை
  7. கருவேப்பிலை சிறிது
  8. 3 கத்தரிக்காய்
  9. 1உருளை கிழங்கு
  10. 1 சிறிய துண்டு மஞ்சள் பூசணி
  11. 1கார்ட்
  12. 5 பீன்ஸ்
  13. 5அவரைக் காய்
  14. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  15. 2 ஸ்பூன் சாம்பார் பொடி
  16. 1 ஸ்பூன் நெய்
  17. 2 ஸ்பூன் நல்லெண்ணெய்
  18. 1/4 கப் புளி கரைசல்
  19. 1/4 ஸ்பூன் கடுகு
  20. 1/4 ஸ்பூன் சீரகம்
  21. 1/4 ஸ்பூன்வெந்தயம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு குக்கரில் பாசிப்பருப்பு துவரம்பருப்பு தக்காளி சேர்த்து ஒரு விசில் வேகவிட்டு தனியே வைக்கவும்......

  2. 2

    காய்கறிகளை ஒரு இஞ்ச் துண்டுகளாக நறுக்கி தனியாக வைக்கவும்.

  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் கடுகு, சீரகம், வெந்தயம் சேர்த்து பொரியவிடவும்.

  4. 4

    பின்னர் வெள்ளைப் பூண்டு சேர்த்து நன்கு வதங்கியதும், சின்ன வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து நன்கு எண்ணெயிலேயே வதக்கவும்..........

  5. 5

    வெங்காயம் நன்கு பொன்னிறமாக வதங்கியதும் நறுக்கிய காய்கறிகள் சேர்த்து எண்ணெயிலேயே ஒரு நிமிடம் நன்கு வதக்கவும்.

  6. 6

    காய்கறிகள் வதங்கியதும் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை மிதமான தீயில் வதக்கவும்...

  7. 7

    வதங்கியதும் காய்கறி பருப்புடன் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து காய்களை 5 முதல் 7 நிமிடம் வேக விடவும்....

  8. 8

    காய்கள் பாதி வெந்ததும் தேவையான அளவு உப்பு, மல்லி இலை சேர்க்கவும்.

  9. 9

    காய்கள் முழுவதும் வெந்ததும் புளி நீர் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து....

  10. 10

    நெய் சேர்த்து, அடுப்பை அணைத்து ஒரு நிமிடம் மூடி, வைத்து பின்னர் கலந்து இட்லி தோசையுடன் பரிமாறவும்.......

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232
அன்று

Similar Recipes