சமையல் குறிப்புகள்
- 1
படத்தில் காண்பித்தது போல் எல்லாவற்றையும் வெட்டி தயார்படுத்தி வைத்துக் கொள்ளவும் அரிசியை நன்கு கழுவி 20 நிமிடங்கள் வரை ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
சிக்கனை வெட்டி நன்கு கழுவி எடுத்து அதனோடு 3 டேபிள் ஸ்பூன் தயிர் ஒரு டீஸ்பூன் கரம்மசாலா ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சிறிதளவு உப்பு மஞ்சள் சிறிதளவு சேர்த்து நன்கு கலந்து அதை 20 நிமிடங்கள் மூடி வைக்கவும்
- 3
பின்னர் பின்னர் ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு உலர்திராட்சை முந்திரிப்பருப்பை பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும் அதே நெய்யில் 50 எம்எல் சமையல் எண்ணெய் சேர்த்து அதில் பிரிஞ்சி இலை ஏலக்காய் பட்டை கிராம்பு சேர்த்து பொறுக்கவும் பின்னர் அதோடு வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 4
பின்னர் அதோடு இஞ்சி பூண்டு விழுது புதினா இலை கொத்தமல்லி இலை தக்காளி சேர்த்து நன்கு கிளறிவிட்டு அதை மூடி வைத்து வேகவிடவும் தக்காளி நன்கு வெந்ததும் அதனுடன் தேவையான அளவு மிளகாய்த்தூள் சேர்த்து கிளறிவிடவும்
- 5
பின்னர் அதோடு சிக்கனை சேர்த்து நன்கு கிளறிவிட்டு 5 நிமிடங்கள் மூடி வைக்கவும் பின்னர் அரிசி அளந்த அந்த கப்பில் இரு மடங்கு தண்ணீர் சேர்க்கவும்
- 6
தண்ணீர் நன்கு கலந்து விட்டு மூடி வைக்கவும் தண்ணீர் நன்கு கொதித்ததும் ஊற வைத்திருக்கும் அரிசியை அதோடு சேர்க்கவும்
- 7
அரிசியை சேர்த்து நன்கு கிளறி விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி வேக வைக்கவும் கடைப்பிடித்து விடாதபடி அடிக்கடி கிளறி விட்டுக் கொள்ளவும்
- 8
80 விகிதம் அரிசி வெந்ததும் தண்ணீர் வற்றி விடும் அந்த நேரத்தில் நன்கு கிளறிவிட்டு அலுமினியம் ஃபாயில் மேல் சுற்றி அல்லது ஒரு தட்டினால் நன்கு மூடி அதன்மேல் ஒரு பொருளை வைத்து அடுப்பை நன்கு குறைத்து 15 நிமிடங்கள் வரை மூடி வைக்கவும்
- 9
15 நிமிடங்களுக்கு பின் பதமாக அரசி வந்து பிரியாணி தயாராகி விட்டது அதன் மேல் கொத்தமல்லி இலை பொரித்து வைத்திருக்கும் முந்திரி பருப்பு உலர் திராட்சையை தூவி இறக்கி விடவும் இப்பொழுது அருமையான மிகவும் சுவையான சிக்கன் பிரியாணி தயாராகி விட்டது
- 10
இந்த பிரியாணியுடன் பச்சை சாலட் ரைத்தா சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிக்கன் பிரியாணி
#wd இந்த சிக்கன் பிரியாணியை குக்பேட் இணையத்தில் நான் இணைய என்னை உற்சாகப்படுத்தி உதவிய மகி பார்வதி சகோதரிக்கும் உலகில் தாயாக சகோதரியாக தோழியாக மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் Pooja Samayal & craft -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தானிய பிரியாணி
#Np1 இந்த பிரியாணி சைவம் அசைவம் கலந்தது இது சீரக சம்பா அரிசியில் செய்தால் மணமும் ருசியும் சுவையும் சத்தும் நிறைந்தது Jayakumar -
-
-
-
-
-
-
காளான் பன்னீர் தம் பிரியாணி
#NP1 சீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த தம் பிரியாணி மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
-
More Recipes
கமெண்ட்