எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. சீரக சம்பா அரிசி ஒரு கப்
  2. கேரட் 2
  3. 10 பீன்ஸ்
  4. 1உருளைக்கிழங்கு
  5. நூல்கோல் 1
  6. பட்டாணி ஒரு கப்
  7. மீன் மேக்கர் ஒரு கைப்பிடி
  8. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன்
  9. சிறியவெங்காயம் ஒரு கைப்பிடி
  10. தக்காளி 2
  11. புதினா ஒரு கைப்பிடி
  12. பட்டை 1 அங்குலம்
  13. கிராம்பு-2
  14. 1 ஏலக்காய்
  15. 1பிரியாணி இலை
  16. உப்பு தேவையான அளவு
  17. 4 டேபிள்ஸ்பூன் நெய்
  18. தயிர் ஒரு டேபிள்ஸ்பூன்
  19. பெரிய வெங்காயம் ஒன்று
  20. வர மிளகாய் 2
  21. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  22. கொத்தமல்லி தழை சிறிதளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் காய்கறிகளை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சிறிய வெங்காயத்தை மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும். தக்காளி வர மிளகாய் இவற்றை மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும். மீல்மேக்கரை சுடுதண்ணீரில் போட்டு எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    சுத்தம் செய்து புதினாவை ஒரு கைப்பிடி எடுத்து கொள்ளவும். ஊறவைத்த பட்டாணியை குக்கரில் 2 விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும். பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை இவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும். சீரக சம்பா அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்

  3. 3

    ஒரு குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை இஞ்சி பூண்டு பேஸ்ட் புதினா இவற்றை வதக்கவும். சிறிய வெங்காயம் பேஸ்ட் நன்கு வதக்கவும். தக்காளி பேஸ்டை சேர்த்து சுருண்டு வரும் வரை வதக்கவும்.

  4. 4

    தக்காளி நறுக்கிய பெரிய வெங்காயம் இவற்றைச் சேர்த்து வதக்கவும் பிறகு அரிந்து வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து வதக்கவும். பிறகு ஒரு டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து வதக்கவும்.

  5. 5

    பிறகு ஊற வைத்த ஜீரக சம்பா அரிசியை சேர்த்து ஒன்னே முக்கால் அளவு டம்ளர் தண்ணீர் விட்டு தேவையான உப்பு சேர்த்து ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும்

  6. 6

    விசில் குக்கரில் அடங்கிய பின் குக்கரைத் திறந்து 2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு கிளறி கொத்தமல்லி இலைகளை தூவி சூடாகப் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Siva Sankari
Siva Sankari @cook_24188468
அன்று
கோயம்புத்தூர்

Similar Recipes