சமையல் குறிப்புகள்
- 1
காய்கறிகளை பொடியாக நறுக்கி வைக்கவும். வெங்காயம் நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். ஒரு பெரிய வெங்காயம் ஒரு தக்காளி மிக்ஸியில் நைசாக அரைத்து வைக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் எடுத்து வைக்கவும். ஒரு குக்கரில் 3 ஸ்பூன் ஆயில் 2 ஸ்பூன் நெய் விட்டு சிறிது சோம்பு பட்டை பிரிஞ்சி இலை கிராம்பு ஏலக்காய் அன்னாசி மொக்கு தாளிக்கவும். பச்சை மிளகாய் ஒன்று கீறிப் போட்டு தாளிக்கவும்
- 2
மசாலா பொருட்கள் வதங்கியதும் பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது மிக்ஸியில் நைசாக அரைத்த தக்காளி வெங்காயம் கலவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.காய்கறிகளை சேர்த்து இரண்டு ஸ்பூன் தனியா தூள் ஒரு ஸ்பூன் மிளகாய்தூள் சேர்த்து சுருள வதக்கவும். சீரக சம்பா அரிசி இருமுறை கழுவி ஒன்றுக்கு இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றி அதனுடன் சேர்க்கவும். தேவையான உப்பு சேர்த்து கலந்து விடவும்.
- 3
அடுப்பை சிம்மில் வைத்து இரண்டு விசில் விடவும்.ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதன் மீது ஒரு வாணலி வைத்து குக்கரில் உள்ள சாதத்தில் கொட்டி மெதுவாக கிளறி விடுங்கள் அடுப்பு சிம்மில் இருக்கட்டும். சுவையான உதிரியான பிரியாணி தயார்.
- 4
ஒரு சிறிய வாணலியில் 2 ஸ்பூன் நெய் விட்டு மூன்று ப்ரட் ஸ்லைஸ் கட் பண்ணி அதில் போட்டு நெய்யில் வறுத்து பிரியாணி மேல் தூவி விடவும். 6 முந்திரி நெய்யில் வறுத்து தூவி விடவும்.சுவையான வெஜ் பிரியாணி தயார். ஒரு பெரிய.வெங்காயம் பொடியாக நறுக்கி தயிரில் கலந்து பச்சை மிளகாய் கொத்தமல்லித்தழை உப்பு சேர்த்து கலந்து தயிர் பச்சடி செய்து கொள்ளவும்.
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஆம்பூர் வெஜ் பிரியாணி
#vattaram #Vattaram3 #vattaram3ரெஹ்மானியா ஹோட்டல் மட்டன் பிரியாணி ரெசிபியில் மட்டனுக்கு பதிலாக காய்கறிகள் சேர்த்து தயாரித்தேன். மிகவும் சுவையான இந்த செய்முறையை அனைவருடனும் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்பிரியாணி சமைக்கும் முறை பாரசீகத்தில் தோன்றி அந்நாட்டு வணிகர்கள், உலகம் சுற்றுவோர் மூலம் தெற்காசியாவுக்கு வந்தது. இன்று நாம் பிரியாணியைச் சமைக்கும் முறை இந்தியாவிலேயே உருவானது. தெற்காசியாவில் மட்டுமல்லாது, தென் கிழக்கு ஆசியாவிலும் அரபு நாடுகளிலும் மேலை நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தெற்காசியர்களும் பிரியாணியின் உள்ளூர் வகைகளை விரும்பி உண்கிறார்கள். Sai's அறிவோம் வாருங்கள் -
-
-
-
ஃகாளிபிளவர் பச்சை பட்டாணி மசாலா 👌
#pms family சப்பாத்தி தயிர் சாதத்திற்கு செம காமிநேசன் ஃகாளிபிளவர் பச்சைபட்டாணி மசாலா செய்ய ஃகாளிபிளவர் சுத்தம் செய்து கொதிக்கும் தண்ணீரில். போட்டு அதோடு உப்பு மஞசள்போட்டு வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும். பிறகு கடாயில் ஆயில் ஊற்றி சீரகம் சோம்பு பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை சேர்த்து பொரிந்தவுடன்பொடியாக நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை சிறிது சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போனவுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் பிறகு மல்லிதூள் வரமிளகாய்தூள் மஞசள் தூள் கரம்மசால் மிளகுதூள் சீரகதூள் கலந்து பச்சைவாசனை போனவுடன் பச்சைபட்டாணி சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி உப்பு கலந்து ஐந்து நிமிடம் வேக வைத்து தேங்காய் முந்திரி அரைத்த பேஸ்ட்கலந்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து உப்பு மஞசள் சேர்த்து சுத்தம் செய்த ஃகாளிபிளவர் சேர்த்து. நன்கு கிளறி சுண்டியவுடன் சூப்பராண டேஸ்டியான ஃகாளிபிளவர்பச்சை பட்டாணி மசாலா சூப்பர்👌 Kalavathi Jayabal -
-
-
-
-
-
தக்காளி சேமியா கிச்சடி/tomoto
#lockdown2 #golden apron 3 #bookவீட்டில் இருந்த தக்காளி, கேரட், பீன்ஸ், குடமிளகாய் வைத்து செய்தேன். பட்டாணி சேர்த்தால் நன்றாக இருக்கும். ஆனால் அது மார்கெட்டில் தான் கிடைக்கும். கொரோன தொற்று பயத்தால் வெளியில் சென்று எதுவும் வாங்குவதில்லை. தெருவில் விற்று செல்லும் காய்களை மட்டும் வாங்கி சமையல் செய்து வருகிறேன். நாமும் அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும் அல்லவா? Meena Ramesh -
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (4)