நிலக்கடலை பிரியாணி

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903

#Np1
நிலக்கடலை உடம்புக்கு மிகவும் நல்லது. நிலக்கடலை ஏழைகளின் முந்திரி. இறைச்சி, முட்டை இவைகளை விட பல மடங்கு புரத சத்து நிலக்கடலையில் உள்ளது. நிலக்கடலையை குழந்தைகளுக்கு வித்தியாசமாக இது மாதிரி பிரியாணியாக செய்து கொடுக்கலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 நபர்கள்
  1. அரிசி - 1 டம்ளர்
  2. நிலக்கடலை - 1/2 டம்ளர்
  3. தக்காளி - 2
  4. பெரிய வெங்காயம் - 2
  5. பச்சை மிளகாய் - 3
  6. பிரியாணி மசாலா - 2 ஸ்பூன்
  7. மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
  8. இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
  9. பட்டை - 2
  10. கிராம்பு - 2
  11. ஏலக்காய் - 2
  12. தேங்காய் பால் - 3 டம்ளர்
  13. எண்ணெய் - 2 ஸ்பூன்
  14. நெய் - 2 ஸ்பூன்
  15. கொத்தமல்லி இலை சிறிதளவு
  16. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்கள்

  2. 2

    1 டம்ளர் அரிசியை 20 நிமிடம் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    நிலக்கடலையை 6 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் போட்டு 5 விசில் விட்டு வேக வைத்து தண்ணீர் வடித்து விட்டு எடுத்துக் கொள்ளவும்.

  4. 4

    தேங்காய் துருவலை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பிழிந்து 3 டம்ளர் தேங்காய்ப்பால் எடுத்துக் கொள்ளவும்.

  5. 5

    அடுப்பில் குக்கரை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய், 1 ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் பட்டை,கிராம்பு,ஏலக்காய் போட்டு தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.

  6. 6

    பிறகு 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.பிறகு தக்காளியை போட்டு வதக்கவும்.தக்காளி வதங்கியதும் 1ஸ்பூன் பிரியாணி மசாலா போட்டு 1 நிமிடம் வதக்கவும்.

  7. 7

    தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.பிறகு வேகவைத்த நிலக்கடலை அதில் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.

  8. 8

    பிறகு ஊற வைத்து அரிசியை தண்ணீர் வடித்து விட்டு அதில் போட்டு கிளறவும்.பிறகு கொத்தமல்லி இலையை அதில் போட்டு கிளறவும்.

  9. 9

    பிறகு அதில் 3 டம்ளர் தேங்காய்ப்பால் ஊற்றவும்.பிறகு கொதி வந்தவுடன் 1 ஸ்பூன் நெய் ஊற்றி குக்கரை மூடி 3 விசில் விட்டு 5 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து அடுப்பை நிறுத்தவும்.

  10. 10

    பிறகு எடுத்துப் பரிமாறவும். சுவையான நிலக்கடலை பிரியாணி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903
அன்று

Similar Recipes