தேவையான பொருட்கள்

55நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. காய்கறிகள் கேரட், பின்ஸ், உருளைக்கிழங்கு - அனைத்தும் -1 கப்
  2. அரிசி - 1 1/2கப்
  3. எண்ணெய் - 3 தேக்கரண்டி
  4. பட்டை, ஏலக்காய்,இலவங்கம்,கடற்பாசி, அண்ணாச்சி பூ
  5. 1/4 தேக்கரண்டி சோம்பு
  6. வெங்காயம் - 2
  7. தக்காளி - 3
  8. பச்சை மிளகாய் - 2
  9. இஞ்சி பூண்டு கலவை - 2 தேக்கரண்டி
  10. தயிர் - 1/4 கப்
  11. மிளகாய் தூள் -2 தேக்கரண்டி, கரம் மசாலா- 1 தேக்கரண்டி
  12. பிரியாணி மசாலா - 1 1/2
  13. தண்ணீர் - 3 கப்
  14. கொத்த மல்லி, புதினா - 2 கை பிடி
  15. உப்பு - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

55நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருள்களின் புகைப்படம்.

  2. 2

    அரிசியை சுத்தம் செய்து 20 நிமிடங்கள் ஊர வைக்க வேண்டும்.

  3. 3

    பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் உத்தி அதில் பட்டை போன்ற நம் எடுத்து வைத்த மசாலா பொருட்களை சேர்ந்து பொரிந்ததும் சேம்பும் சேர்ந்து கலந்து கொள்ள வேண்டும்.

  4. 4

    பின் வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்ந்து நன்றாக வதக்கவும்.

  5. 5

    வெங்காயம் வதங்கிய உடன் தக்காளி சேர்ந்து வதக்கவும். தக்காளி சிறிது வதங்கி ய உடன் அதில் இஞ்சி பூண்டு கலவையை சேர்த்து நன்றாக கைவிடாமல் வதக்கவும்.

  6. 6

    இஞ்சி பூண்டு கலவை பச்சை வாசனை போனதும். எடுத்து வைத்த காய்கறிகளை சேர்த்து 1 நிமிடங்கள் வைக்கவும். அதன் உடன் வேக வைத்த ரோட்டிவும் சேர்ந்து கலந்து கொள்ள வேண்டும்.

  7. 7

    பின் அதில் தயிர் உத்தி கலந்து கொள்ள வேண்டும்.

  8. 8

    பின் அதில் எடுத்து வைத்த மசாலா தூள்களை சேர்ந்து கலந்து3 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும்.

  9. 9

    பின் அதில் தண்ணீர் சேர்ந்து கொதிக்க விடவும்.

  10. 10

    பின் அரிசியை சேர்ந்து மெதுவாக கலந்து கொள்ள வேண்டும்.

  11. 11

    பின் தட்டு போட்டு மூடி அரிசி வும் தண்ணீரும் சமஅளவில் இருக்கும் போது அடுப்பை மிதமான தீயில் வைத்து தோசை கல் வைத்து அதன்மேல் சாதம் செய்த பாத்திரத்தை அதன் மேல் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் சேர்ந்து வைக்கவும்.

  12. 12

    நன்றி
    வணக்கம்

  13. 13

    20 நிமிடங்கள் கழித்து அடுப்பை நிறுத்தி 10 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். பின் சுவையான காய்சாதம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஹரி கிருஷ்ணன்
அன்று

Similar Recipes