எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. மஞ்சள் பூசணிக்காய் - 1 கப் (நறுக்கியது) * வெங்காயம் - 1 * பச்சை மிளகாய் - 3 * துருவிய தேங்காய் - சிறிது * கடுகு - 1 டீஸ்பூன்
  2. உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் * சீரகம் - 1 டீஸ்பூன் * பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை * மஞ்சள் தூள் - 1 சிட்டிகை * உப்பு - தேவையான அளவு
  3. கறிவேப்பிலை - சிறிது * எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் * தண்ணீர் - சிறிது

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும்.

  2. 2

    எண்ணெய் சூடானதும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

  3. 3

    பின் அதில் பச்சை மிளகாயை கீறிப் போட்டு வெள்ளையாகும் வரை வதக்க வேண்டும்.

  4. 4

    அதன் பின் வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு தூவி சிறிது நேரம் வதக்க வேண்டும்.

  5. 5

    பிறகு மஞ்சள் பூசணியை சேர்த்து ஒருமுறை வதக்கி விட வேண்டும்

  6. 6

    பின்பு மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது நீர் தெளித்து ஒருமுறை கிளறி விட்டு, மூடி வைத்து 10 நிமிடம் மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும்.

  7. 7

    இறுதியில் அதில் சிறிது துருவிய தேங்காயை சேர்த்து பிரட்டி இறக்கினால், சுவையான பூசணிக்காய் பொரியல் ரெடி!

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sakthi Bharathi
Sakthi Bharathi @cook_21005019
அன்று

Similar Recipes