தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 200 கிராம் துவரம் பருப்பு
  2. 50 கிராம் பாசிப்பருப்பு
  3. 1 முருங்கைக்காய்
  4. 1 மாங்காய்
  5. 1 கத்தரிக்காய்
  6. 1 பெரிய வெங்காயம்
  7. 1 தக்காளி
  8. 2 பச்சை ‌மிளகாய்
  9. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  10. 6 ஸ்பூன் சாம்பார் தூள்
  11. 25 மில்லி எண்ணெய்
  12. 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  13. கல் உப்பு தேவையான அளவு
  14. சிறிதளவுபுளி
  15. தாளிக்க
  16. 1 ஸ்பூன் கடுகு
  17. 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  18. கருவேப்பிலை
  19. கொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் துவரம் பருப்பு, பாசிப்பருப்பு சேர்த்து குக்கரில் வேகவைத்து எடுக்கவும்

  2. 2

    பிறகு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில் முருங்கைக்காய், கத்தரிக்காய் சேர்த்து வேகவைத்து அதில் வேகவைத்த துவரம் பருப்பு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்

  3. 3

    பிறகு அதில் சாம்பார் தூள், புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்

  4. 4

    பிறகு மற்றொரு வாணலில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை ‌மிளகாய், வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கி எடுக்கவும்

  5. 5

    பிறகு வதக்கி வைத்த வெங்காயத்தை சாம்பாரில் ‌சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும் பிறகு அதில் மாங்காய், பெருங்காயம் சேர்த்து கொதிக்கவிடவும்

  6. 6

    இப்பொழுது சுவையான மாங்காய் சாம்பார் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ரேணுகா சரவணன்
அன்று
இல்லத்தரசி, சமையல் ஆர்வம் எனது குடும்பத்திற்காக
மேலும் படிக்க

Similar Recipes