தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1 பாக்கெட் கம்பு சேமியா
  2. 1 கப் நறுக்கிய சின்ன வெங்காயம்
  3. 4 பச்சை மிளகாய்
  4. 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  5. 1 ஸ்பூன் கடுகு
  6. 2 ஸ்பூன் கடலைப்பருப்பு
  7. 2 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  8. கறிவேப்பிலை சிறிது
  9. கொத்தமல்லி தழை சிறிது
  10. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    கம்பு சேமியாவை தண்ணீரில் போட்டு மூன்று நிமிடங்கள் வரை ஊறவிடவும் பின் தண்ணீரை வடிகட்டி இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு தட்டில் பரப்பி ஆவியில் 15 நிமிடங்கள் வரை வேகவிடவும்

  2. 2

    பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்த்து சிவக்க விடவும்

    நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்

  3. 3

    வெங்காயம் வதங்கியதும் வேகவைத்த கம்பு சேமியா சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்

  4. 4

    பின் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes