பிரசாதம் காம்ப்போ (Prasadam combo recipe in tamil)

#pooja
மூன்று விதமான சாதம் எங்க அம்மா காலத்தில நவராத்திரி என்றால் கடைசி ஒன்பதாவது நாள் ஒன்பது வகையான சாதம் செய்து சாமிக்கு நெய் வேத்தியம் செய்து படைப்பார்களாம் இப்போ செய்யறது விட சாப்பிட தான் பலமா யோசிக்க வேண்டும் சாமிக்கு படைத்தாலும் சாப்பிட போவது நாம் தான எப்படி சாப்பிடுவது அதுதான் சிம்ப்ளா மூன்று சாதம் மட்டுமே
பிரசாதம் காம்ப்போ (Prasadam combo recipe in tamil)
#pooja
மூன்று விதமான சாதம் எங்க அம்மா காலத்தில நவராத்திரி என்றால் கடைசி ஒன்பதாவது நாள் ஒன்பது வகையான சாதம் செய்து சாமிக்கு நெய் வேத்தியம் செய்து படைப்பார்களாம் இப்போ செய்யறது விட சாப்பிட தான் பலமா யோசிக்க வேண்டும் சாமிக்கு படைத்தாலும் சாப்பிட போவது நாம் தான எப்படி சாப்பிடுவது அதுதான் சிம்ப்ளா மூன்று சாதம் மட்டுமே
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி சாதம்: வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும், இஞ்சி பூண்டு சோம்பு சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும்,பின் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்
- 2
பின் கறிவேப்பிலை சேர்த்து நறுக்கிய தக்காளி சேர்த்து உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு சுருள வதங்கியதும் இறக்கி வடித்த சாதம் சேர்த்து நன்கு கிளறவும் கொத்தமல்லி தழை தூவி கிளறி இறக்கவும்
- 3
தேங்காய் சாதம்: வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்த்து சிவக்க விடவும் பின் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் பின் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின் துருவிய தேங்காய் சேர்த்து உப்பு சேர்த்து தேங்காய் மணம் வரும் வரை 8 நிமிடங்கள் வரை வதக்கவும் பின் வடித்த சாதம் சேர்த்து கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கிளறவும்
- 4
புளி சாதம்: புளியை 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து கரைத்து வடிகட்டி கொள்ளவும், வறுத்து பொடி செய்ய கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து கொள்ளவும், பூண்டை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்து எடுக்கவும்
- 5
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் அரைத்த பூண்டு வரமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் வடிகட்டிய புளிக்கரைசல் ஐ ஊற்றி கல் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்
- 6
பாதி சுண்டியதும் வறுத்து பொடி செய்த பொடியை தூவி நன்கு கலந்து கொதிக்க விடவும் எண்ணெய் பிரிந்து வரும் வரை சுண்ட விடவும் பின் இறக்கி வடித்த சாதம் கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கிளறவும் இதன் மேல் ஒரு கரண்டி சூடான நல்லெண்ணெய் ஊற்றி நன்கு கிளறி விடவும்
- 7
சுவையான ஆரோக்கியமான மூன்று விதமான சாதம் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தக்காளி சாதம்
#onepotஎந்த விதமான மசாலா தூள் இல்லாமல் வெறும் தக்காளி ருசியில் மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
பச்சரிசி புதினா சாதம் (Pacharisi puthina satham recipe in tamil)
#pooja (வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)எளிதாக உடனே செய்யக்கூடிய சாதம் Vaishu Aadhira -
பச்சரிசி சீரக சாதம் (Pacharisi seeraga satham recipe in tamil)
#pooja ( வெங்காயம் , பூண்டு சேர்க்காமல்)எளிதாக உடனே செய்யக்கூடிய மற்றும் உடலுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும் உணவு சீரக சாதம். குழந்தைகள் முதல் அனைத்து வயதினருக்கும் ஏற்றது Vaishu Aadhira -
-
-
-
குடைமிளகாய் சாதம்(capsicum rice recipe in tamil)
#Welcomeகுழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான சிம்ப்ளான சாதம் Sudharani // OS KITCHEN -
தக்காளி சாதம்
#nutrient2மிகவும் ஈசியா அதே சமயம் மிகவும் ருசியாக செய்ய ஏற்ற சாதம் Sudharani // OS KITCHEN -
-
தக்காளி சாதம்
#Everyday2#Tvஅறுசுவை இது தனிசுவை நிகழ்ச்சியில ரேவதி சண்முகம் அம்மா சொல்லி கொடுத்த சிம்ப்ளான ஒரு ரெசிபி சமையலுக்கு புதுசு அடுப்பு பக்கம் போகாதவங்க கூட மிகவும் எளிய முறையில இந்த ரெசிபி செய்யலாம் Sudharani // OS KITCHEN -
தயிர் சாதம்
#Everyday2அடிக்கிற வெயில அடுப்பு பக்கம் நிற்கவே முடியாது இதுல மதிய நேரத்தில கூட்டு பொரியல் கிரேவி இப்படி வேர்க்க விறுவிறுக்க செய்ய மிகவும் சிரமமாக இருக்கும் அத தவிர்க்க இந்த மாதிரி சுடச்சுட சாப்பாடு மட்டும் வைத்து சிம்ப்ளா தயிர் சாதம் செஞ்சா அசத்தலா இருக்கும் Sudharani // OS KITCHEN -
கோவைக்காய் ரைஸ்
Kids 3குழந்தைகள் காய் சாப்பிட மிகவும் அடம்பிடிப்பார்கள் இந்த மாதிரி கலவை சாதத்தை வெவ்வேறு வகையில் வெவ்வேறு காய்கறிகளை பயன்படுத்தி செய்யலாம் , என்னுடைய பசங்களுக்கு அம்மா ஸ்பெஷல் இந்த சாதம் , காய் நறுக்குவது மட்டும் சற்று வேலை காய் இருப்பதே தெரிய கூடாது அந்த அளவிற்கு மிகவும் பொடியாக நறுக்கவும் நார்மல் துண்டுகளாக நறுக்கி செய்தால் சவுகரியமாக எடுத்து அப்படியே தள்ளி வெச்சிருவாங்க Sudharani // OS KITCHEN -
வல்லாரை கீரை பொடி சாதம்(vallarai keerai podi sadam recipe in tamil)
#LBவளரும் குழந்தைகளுக்கு வல்லாரை கீரை மிகவும் ஆரோக்கியமானது கீரையை அப்படியே சமைத்து கொடுத்தா சில குழந்தைகள் சாப்பிட மாட்டாங்க வல்லாரை கீரை வாசம் நிறைய பேர்க்கு பிடிக்காது ஆனா இந்த மாதிரி பொடி செய்து கொடுக்கும் போது அதிக வல்லாரை கீரை வாசம் வராது டேஸ்ட் செமயா இருக்கும் Sudharani // OS KITCHEN -
ரச சாதம் (Rasa satham recipe in tamil)
#onepotநோயில் இருந்து உடல் நிலை சீராகி வரும் போது சாப்பிட மிகவும் சிரமமாக இருக்கும் அப்போது இந்த மாதிரி சாதத்தை நன்கு குழைத்து இவ்வாறு ரெடி செய்து சுடச் சுடச் பரிமாறினால் தட்டு காலி ஆகறதே தெரியாது Sudharani // OS KITCHEN -
-
தென்னிந்திய மீல்ஸ் 2 (Thenindia meals 2 recipe in tamil)
#kids3வெங்கல தட்டில் வாழை இலை காட்டிலும் அப்படியே சாப்பிடுவது நல்லது Sudharani // OS KITCHEN -
லஞ்ச் காம்போ (mini Lunch combo)
#karnatakaகர்நாடகா மாநிலத்தில் பாரம்பரியமான சில உணவுகளை சேர்த்து மொத்தமாக மினி லஞ்ச் காம்போ வாக கொடுத்துள்ளேன் சிம்ப்ளா அதே சமயம் ருசியில் வித்தியாசமாகவும் இருக்கும் இந்த உணவுகள்ராகி முட்டூ (ராகி களி)உப்பு நசுரூ (உப்பு சாறு)வாங்கி பாத்கீரை கூட்டுசாதம்வெங்காய வடகம் Sudharani // OS KITCHEN -
பச்சரிசி நெல்லி சாதம் (Pacharisi nelli satham recipe in tamil)
#pooja ( வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)சர்க்கரை நோயாளிகள் மற்றும் அனைவருக்கும் சத்துக்கள் நிறைந்துள்ளன நெல்லி சாதம் Vaishu Aadhira -
-
-
பச்சரிசி புளி சாதம் (Pacharisi pulisatham recipe in tamil)
# Pooja( வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)மிகவும் சுவையாக மற்றும் மணமாக இருக்கும் புளி சாதம் Vaishu Aadhira -
முளைகட்டிய கொண்டைகடலை சாதம்
#அரிசி வகை உணவுகள்முளைகட்டிய கருப்பு கொண்டைகடலை உபயோகப்படுத்தி செய்த சத்தான சாதம். Sowmya Sundar -
தென்னிந்திய மீல்ஸ் 1 (Thenindia meals recipe in tamil)
#kids3என்னுடைய மகன் பள்ளிக்கு சென்ற போது (எல்.கே.ஜி ) அந்த ஸ்கூல் தலைமையாளர் குழந்தைகளுக்கு எந்த விதமான அசௌகரியங்களை (சிரமம்) பார்க்காமல் வறுத்த உணவுகள் சப்பாத்தி விட முழுமையான மதிய உணவு சாதம் பொரியல் பருப்பு ரசம் தயிர் இப்படி கொடுத்து அனுப்பி விடுங்க நாங்க சாப்பிட பழக்கி விடுகிறோம் ஏனென்றால் காலையில அவசரமாக சாப்பிட்டு வருவாங்க இரவு சரியாக சாப்பிட மாட்டார்கள் மேலும் இரவில் எளிதில் ஜீரணமாகும் உணவுகளை கொடுக்க வேண்டும் அதனால் நன்றாக சாப்பிடுவது இந்த மதிய உணவு தான் அதை முழுமையான உணவாக கொடுத்து விடுங்கள் என்று கூறினார் வறுத்த பாஸ்புட் உணவுகளை வாரத்தில் ஒரு நாள் கொடுத்து விடுங்கள் என்று கூறினார் அதனால் இன்று வரை அவர்களுக்கு பருப்பு ரசம் பொரியல் தயிர் கலந்த முழு உணவு தான் வளரும் குழந்தைகளுக்கு இதுவே முழுமையான ஆரோக்கியமான உணவு இதை அவர்கள் விரும்பும் வகையில் செய்து கொள்ளலாம் வறுத்த சாதம் சான்ட்விச் சப்பாத்தி கொடுக்க வேண்டாம் என்பதில்லை நீங்களே யோசித்து பாருங்கள் ப்ரீ.கே.ஜி. முதல் கொண்டு +2 வரை 15 வருடங்கள் மீண்டும் காலேஜ் 3_5 வருடங்கள் இத்தனை வருடத்தில் அவர்களின் முழு உணவு நேரம் என்பது இந்த மதிய உணவு தான் அதனால் தயவுசெய்து வளரும் குழந்தைகளுக்கு முழு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சரிவிகித உணவை பழகப்படுத்துங்கள் Sudharani // OS KITCHEN -
-
கார்லிக் பெப்பர் ரைஸ் (Garlic pepper rice recipe in tamil)
#Varietyriceகலவை சாதம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று அதை நாம் சுவையுடனும் மருத்துவ குணத்துடனும் செய்யும் பொழுது அனைவருக்கும் உகந்த ஒரு உணவாகும் Sangaraeswari Sangaran -
-
-
-
More Recipes
கமெண்ட் (3)