மாவுபிசையாமல் எப்படி சப்பாத்தி செய்வது மற்றும் சென்னா மசாலா

Shailaja Selvaraj
Shailaja Selvaraj @cook_28836664
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 2மேசைக் கரண்டி எண்ணெய்
  2. 1 கப் கோதுமை மாவு
  3. 1 கப் மைதா மாவு
  4. உப்பு தேவையான அளவு
  5. 1மேசைக் கரண்டி சர்க்கரை
  6. ஒரு கப் வெள்ளை கொண்டைக்கடலை
  7. 1நறுக்கிய வெங்காயம்
  8. 1நறுக்கிய தக்காளி
  9. 1 பச்சை மிளகாய்
  10. சிறிதளவுகருவேப்பிலை
  11. சிறிதளவுசுத்தமல்லி
  12. 1 கப் சிறிதாக நறுக்கிய தேங்காய்
  13. 1மேசைக் கரண்டி குழம்பு மிளகாய் தூள்
  14. 1/2மேசைக் கரண்டி மஞ்சள் தூள்
  15. 1/2மேசைக் கரண்டி கஷ்மிரி சில்லி பவுடர்
  16. 1மேசைக் கரண்டி இஞ்சி பூண்டு விழுதுகள்
  17. ஒரு இன்ச் பட்டை
  18. 1 மராத்தி முக்
  19. 2 கிராம்பு
  20. சிறிதளவுகல்பாசி
  21. 1பிரிஞ்சி இலை1
  22. 1/2மேசைக் கரண்டி ஒன்னும் பாதியுமாக தட்டி எடுத்து சோம்பு
  23. 2 ஏலக்காய்
  24. உப்பு தேவையான அளவு
  25. 3மேசைக் கரண்டி எண்ணெய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு மைதா மாவு சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து நன்கு தோசைமாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும், பின் தோசைக் கல்லை நன்கு காய வைத்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து இரண்டு கரண்டி அளவு மாவை எடுத்து கல்லில் ஊற்றி கொள்ளவும்

  2. 2

    பின் அது இரண்டு பக்கமும் வேக ஆரம்பிக்கும் போது ஒரு சாஃப்டான துணி எடுத்து மெதுவாக அழுத்தி விடவும் ஓரங்களில்

  3. 3

    எனது சப்பாத்தி பதத்திற்கு இரண்டு பக்கமும் தெரிய ஆரம்பிக்கும் போது சிறிதளவு எண்ணெய் ஊற்றி மெதுவாக தோசை கரண்டி வைத்து தடவ வேண்டும், சப்பாத்தி ஈசியாக ரெடியாகிவிட்டது

  4. 4

    அடுத்ததாக சென்னா மசாலா செய்வதற்கு நாம் நம் வெள்ளை கொண்டைக்கடலையை 4 முதல் 5 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும், பின் அதை ஒரு சின்ன குக்கரில் சேர்த்து இரண்டு விசில் வரும்வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும்

  5. 5

    தேங்காவை ஒரு மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும், பின் ஒரு கனமான கடாயில் எண்ணெய் சேர்த்து

  6. 6

    மசாலாக்கள் எல்லாத்தையும் போட்டு வதக்கிய பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும், அதனுடன் பச்சைமிளகாய் தக்காளி மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு கிளற வேண்டும்

  7. 7

    தக்காளி நன்கு வதங்கியதும் குழம்பு மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், கஷ்மிரி சில்லி பவுடர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும், பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறிக் கொள்ளவும், பின் இந்த கலவையுடன் வேக வைத்திருக்கும் கொண்டைக்கடலை சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும் ஒரு பத்து நிமிடத்திற்குள் நன்கு கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கி விடவும்

  8. 8

    சுவையான சப்பாத்தி மற்றும் சன்னா மசாலா தயார், ரொம்பவே சுலபமாக மாவுபிசையாமல் எப்படி சப்பாத்தி செய்வது என்று நாம் பார்த்தோம், நீங்கள் மறக்காமல் உங்கள் இல்லத்தில் இந்த ரெசிபியை முயற்சி செய்து பார்த்து எப்படி இருந்தது என்று எனக்கு கமெண்ட் செய்யவும், நன்றி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shailaja Selvaraj
Shailaja Selvaraj @cook_28836664
அன்று

Similar Recipes