எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. மேல் மாவு:
  2. 1 கப் மைதா
  3. 1 கப் கோதுமை மாவு
  4. உப்பு தேவையான அளவு
  5. 1/4 கப் பால் அல்லது தயிர் அல்லது 1 முட்டை
  6. தண்ணீர் தேவையான அளவு
  7. 1/2 கப் எண்ணெய்
  8. ஆலு மசாலா செய்ய:
  9. 6உருளைக்கிழங்கு
  10. 1 கப் வெங்காயம்
  11. 10 பல் பூண்டு
  12. இஞ்சி சிறிய துண்டு
  13. 4 பச்சை மிளகாய்
  14. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  15. 1 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  16. 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  17. 2 சிட்டிகை பெருங்காயத்தூள்
  18. உப்பு தேவையான அளவு
  19. 6 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  20. 1 ஸ்பூன் கடுகு
  21. 1 ஸ்பூன் சோம்பு
  22. கறிவேப்பிலை சிறிது
  23. கொத்தமல்லி தழை சிறிது
  24. 2 டேபிள்ஸ்பூன் பட்டர்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    மைதா கோதுமை மாவு உடன் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் பால் அல்லது தயிர் அல்லது முட்டை ஏதாவது ஒன்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் எண்ணெய் விட்டு ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் மீண்டும் நன்கு பிசைந்து உருண்டைகளாக உருட்டி மீண்டும் எண்ணெய் விட்டு அரை மணி நேரம் வரை ஊறவிடவும்

  2. 2

    பின் ஆலு மசாலா செய்ய: உருளைக்கிழங்கு ஐ வேகவைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும் பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சோம்பு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் பின் அரைத்த இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும் பின் மிளகாய்த்தூள் கரம் மசாலா தூள் பெருங்காயத்தூள் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும் பின் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கவும் கறிவேப்பிலை கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  3. 3

    பின் மாவை தேய்த்து நடுவில் மசாலா வைத்து மூடவும்

  4. 4

    பின் வரமாவை சற்று தூவி மீண்டும் மெலிதாக தேய்க்கவும்

  5. 5

    பின் சூடான தோசைக்கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும் சூடா இருக்கு போதே சிறிது பட்டர் தடவி வைக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes