சென்னை சிக்கன் பிரியாணி

Mammas Samayal
Mammas Samayal @Mammas_18549953

#vattaram

மிகவும் எளிய முறையில் செய்யக்கூடிய குறைவான மசாலா பொருட்கள் பயன்படுத்தி சுவையான சென்னை சிக்கன் பிரியாணி!

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40நிமிடங்கள்
8 பேர்
  1. 1கிலோ பாஸ்மதி அரிசி
  2. 1கிலோ சிக்கன்
  3. 4தே.கரண்டி எண்ணெய்
  4. 3தே.கரண்டி நெய்
  5. 8 ஏலக்காய்
  6. 8 கிராம்பு
  7. 3 பட்டை
  8. 4 வெங்காயம்
  9. 4 தக்காளி
  10. 6 பச்சைமிளகாய்
  11. 3தே கரண்டி இஞ்சிபூண்டுவிழுதுு
  12. 200கி தயிர்
  13. புதினா,மல்லி தே. அளவு
  14. உப்பு தே. அளவு

சமையல் குறிப்புகள்

40நிமிடங்கள்
  1. 1

    பாஸ்மதி அரிசியை கழுவி 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் சேர்க்கவும்.சூடாநதும் 5 ஏலக்காய்,கிராம்பு,2துண்டு பட்டை சேர்க்கவும்,பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்,பச்சைமிளகாய்,தக்காளி சேர்த்து வதக்கவும்.

  2. 2

    பின் நன்கு சுத்தம் செய்த சிக்கனை சேர்த்து பிரட்டி விடவும்.பின் தயிர்,தே.அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.

  3. 3

    பின் புதினா,மல்லி சேர்த்து மூடி வைத்து 15 நிமிடங்கள் சிக்கனை வேக விடவும்.

  4. 4

    அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில் 2ஏலக்காய்,கிராம்பு,பட்டை சாதத்திர்க்கு தே. அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.கொதித்ததும் ஊற வைத்த பாஸ்மதி அரிசி சேர்த்து முக்கால் பங்கு வெந்ததும் வடித்து கொள்ளவும்.

  5. 5

    பின் தயார் படுத்திய பிரியாணி கிரெவி யுடன் சேர்த்து கலந்து விட்டு நெய் சேர்த்து 10நிமிடங்கள் தம் போடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Mammas Samayal
Mammas Samayal @Mammas_18549953
அன்று

Similar Recipes