"இடியாப்பம்" & "சென்னை வடகறி" # Vattaram.#week-1

Jenees Arshad
Jenees Arshad @NJA89912126

#Vattaram.#Week-1.
#இடியாப்பம் & "சென்னை வடகறி"

"இடியாப்பம்" & "சென்னை வடகறி" # Vattaram.#week-1

#Vattaram.#Week-1.
#இடியாப்பம் & "சென்னை வடகறி"

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி நேரம்.
15 பரிமாறுவது
  1. இடியாப்பம் செய்ய தேவையான பொருட்கள்:
  2. பச்சை அரிசி (இடியாப்பம்)மாவு-3/4கிலோ
  3. வெந்நீர் & தண்ணீர்-தேவையான அளவு
  4. உப்பு தூள்-தேவையான அளவு
  5. சென்னை வடகறி செய்ய தேவையான பொருட்கள்:
  6. கடலை பருப்பு-200கிராம்
  7. தண்ணீர்-தேவையான அளவு(பருப்பு ஊர வைக்க)
  8. பச்சை மிளகாய் மீடியம் அளவு-3
  9. பூண்டு-8பல்
  10. இஞ்சி-சிறிய துண்டு
  11. பெருஞ்சீரகம்-1டீஸ்பூன்
  12. உப்பு தூள்-தேவையான அளவு
  13. பல்லாரி வெங்காயம்-3
  14. தக்காளி-4
  15. இஞ்சி பூண்டு விழுது-1டீஸ்பூன்
  16. எண்ணெய்-தேவையான அளவு
  17. உப்பு தூள்-தேவையான அளவு
  18. மிளகாய் தூள்-1டீஸ்பூன்
  19. மல்லி தூள்-1டீஸ்பூன்
  20. கரம் மசாலா-1டீஸ்பூன்
  21. புதினா-கையளவு
  22. தாளிப்புக்கு தேவையான பொருட்கள்:
  23. பிரியாணி இலை-2
  24. பட்டை-1 மீடியம் அளவு
  25. கிராம்பு-5
  26. ஏலக்காய்-6
  27. கருவேப்பிலை-சிறிதளவு

சமையல் குறிப்புகள்

1மணி நேரம்.
  1. 1

    ஒரு பாத்திரத்தில் 3/4கிலோ இடியாப்பம் மாவை தேவையான அளவு வெந்நீர்,உப்பு தூள் மற்றும் கொஞ்சம் பச்சை தண்ணீர் ஊற்றி இழுத்து குழைக்கவும்.

  2. 2

    இடியாப்பம் தட்டிற்கு எண்ணெய் தடவி கொண்டு உரலில் தேவையான அளவு குழைத்த மாவை வைக்க வேண்டும்.

  3. 3

    இட்லி பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சூடான பிறகு நெறித்து வைத்த இடியாப்பத்தை இட்லி பாத்திரத்தில் உள்ளே வைத்து மூடி வைத்து வேக வைக்கவும்.

  4. 4

    இடியாப்பம் ரெடி.
    200கிராம் கடலைப் பருப்பை நன்றாக கழுவி 1மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
    3மீடியம் அளவு பச்சை மிளகாய்,1டீஸ்பூன் பெருஞ்சீரகம்,8பல் பூண்டு,சிறிய துண்டு இஞ்சி,தேவையான அளவு உப்பு தூள் போட்டு மிக்சி ஜாரில் போடவும்.

  5. 5

    மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை கொஞ்சம் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
    வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடான பிறகு சிறிது சிறிதாக பக்கோடா போல் போட்டு பொன் நிறமாக வறுத்துக் கொள்ளவும்.

  6. 6

    கடலைப் பருப்பு பக்கோடா ரெடி.
    தேவையான அளவு எண்ணெய்,
    2பிரியாணி இலை,1துண்டு பட்டை,5கிராம்பு,6ஏலக்காய்,கருவேப்பிலை சிறிதளவு,
    3வெங்காயம்,4தக்காளி,1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,உப்பு தூள்-தேவையான அளவு,1டீஸ்பூன் மிளகாய் தூள்,1டீஸ்பூன் மல்லி தூள்,1டீஸ்பூன் கரம் மசாலா.அனைத்தையும் தயார் செய்துக் கொள்ளுங்கள்.

  7. 7

    வெங்காயம் & தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
    பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடான பிறகு 2பிரியாணி இலை,1துண்டு பட்டை,5கிராம்பு,6ஏலக்காய்,1டீஸ்பூன் பெருஞ்சீரகம் போட்டு தாளித்துக் கொள்ளவும்.

  8. 8

    பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.அடுத்து தக்காளி,இஞ்சி பூண்டு விழுது,மிளகாய் தூள்,மல்லி தூள்,கரம் மசாலா,தேவையான அளவு உப்பு தூள்,கையளவு புதினா இலை போட்டு வதக்கிக் கொள்ளவும்.

  9. 9

    தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விடவும்.அடுத்து வறுத்து வைத்த கடலை பருப்பு பக்கோடாவை போடவும்.

  10. 10

    அடுத்து 10நிமிடம் மூடி வைத்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.

    "சென்னை வடகறி"ரெடி......

  11. 11

    "இடியாப்பம்" & "சென்னை வடகறி" ரெடி.....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jenees Arshad
Jenees Arshad @NJA89912126
அன்று

Similar Recipes