மல்லிகைப்பூ இட்லி

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#Combo1
ரேஷன் அரிசியில வெள்ளையா மல்லிகைப்பூ நிறத்தில பஞ்சு போல இட்லி செய்யலாம் வாங்க

இட்லிங்கறது பல பேருக்கு, பல விதம், மாவு அரைப்பதில் இருந்து, ஆவியில் வேக வைத்து எடுப்பது வரை, ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பதம், பக்குவம் உண்டு, இது எங்க அம்மா கிட்ட இருந்து கத்துகிட்டது , இதுக்கு ஏன் மல்லிகைப்பூ இட்லி என்று பெயர்னா, மல்லிகைப்பூ மாதிரி வெள்ளையா பஞ்சு மாதிரி இருக்கும் இது செய்வது பெரிய கஷ்டம் எல்லாம் இல்லை இதற்கு சின்ன சின்ன டிப்ஸ் தான் , முயற்சி செய்து பாருங்கள்

குறிப்பு:

பல பேர் இட்லி மற்றும் தோசை இரண்டிற்கும் ஒரே மாவை ஆட்டி சுடுவாங்க இந்த இட்லிக்கு இந்த மாவை தனியா தான் ஆட்ட வேண்டும் இதில் தோசை வார்க்க முடியாது ஏனெனில் இதில் வெந்தயம் சேர்ப்பதில்லை தோசை சிவந்து மொறுமொறுப்பாக வர வெந்தயம் அவசியமாகும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 5 கப் ரேஷன் அரிசி
  2. 3 கப் இட்லி அரிசி
  3. 2 கப் பச்சரிசி
  4. 1 கப் உளுந்து
  5. கல் உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    ரேஷன் அரிசி இட்லி அரிசி பச்சரிசி எல்லாம் ஒன்றாக சேர்த்து மூன்று முறை கழுவி தண்ணீரை வடிகட்டி பின் தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் வரை ஊறவிடவும் உளுந்தை அதே போல் மூன்று முறை நன்றாக கழுவி தண்ணீரை வடிகட்டி பின் மீண்டும் தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் ஊறிய அரிசியை இரண்டு முறை கழுவி தண்ணீரை வடிகட்டி கிரைண்டரில் போட்டு அரைக்கவும் மிகவும் நைசாக அரைக்க வேண்டாம் பின் உளுந்தையும் இரண்டு முறை கழுவி கிரைண்டரில் போட்டு சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பஞ்சு போல் அரைக்கவும்

  2. 2

    பின் அரிசி மாவுடன் உப்பு சேர்த்து உளுந்தை நன்கு கலந்து கொள்ளவும் எட்டு மணி நேரம் வரை புளிக்க விடவும் மாவை கைகளால் நன்றாக கலந்து கொண்டு பின் புளிக்க விடவும் புளிக்க வைத்த மாவை அடித்து கலக்க கூடாது ஓட்ட ஓட்டையா ஏர் ஃபார்ம் ஆகி இருக்கும் இது தான் இட்லி சாஃப்ட் ஆக பஞ்சு போல இருக்கும்

  3. 3

    பின் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு கொதித்ததும் இட்லி தட்டில் ஈரத்துணி விரித்து அதன் மேல் இந்த மாவை கலக்காமல் (ஐஸ்கிரீம் ஐ ஸ்கூப் செய்வது போல்) எடுத்து ஊற்ற வேண்டும்

  4. 4

    மாவை குழி நிறைய கணமாக ஊற்ற கூடாது

  5. 5

    பின் மூடி வைத்து 18 நிமிடங்கள் வரை ஆவியில் வேகவிடவும்

  6. 6

    அடுப்பை அணைத்து உடனே எடுக்காமல் இரண்டு மூன்று நிமிடங்கள் கழித்து இட்லி மூடியை திறந்து எடுக்கவும்

  7. 7

    வெள்ளையா பஞ்சு போல சாஃப்ட் ஆக இட்லி ரெடி

  8. 8

    இந்த ஹோல்ஸ் தான் இதுல மிகவும் முக்கியமானது இட்லி சுடும் போது மாவை எக்காரணத்தைக் கொண்டும் அடித்து கலக்க கூடாது அரைத்த உடன் நல்லா கலந்து புளிக்க விட வேண்டும் புளித்த மாவை அடித்து கலக்க கூடாது ஐஸ்கிரீம் ஐ ஸ்கூப் செய்து எடுப்பது போல எடுக்க வேண்டும் கணமாகவும் ஊற்ற கூடாது இது எல்லாம் தான் இதில் கவனிக்க வேண்டும் அப்பறம் இந்த நிறம் அரிசியை ஐந்து முறை நன்றாக கழுவ வேண்டும் ஊறவைப்பதற்கு முன் மூன்று முறை ஊறிய பிறகு இரண்டு முறை நன்றாக கழுவ வேண்டும்

  9. 9

    சுவையான ஆரோக்கியமான சாஃப்ட் இட்லி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes