கறுப்பு உளுந்து தோசை

தென் மாவட்டங்களில் முழு உளுந்து தோசை என்று சொல்வோம். உளுந்தைத் தோலோடு ஊற வைத்து அரைத்து, அரைத்த அரிசி மாவோடு கலந்து செய்யப்படும் தோசை. மிகவும் ருசியான தோசை. ஆரோக்கியமான தோசையும் கூட. தோலோடு உளுந்தை பயன் படுத்துவதால் உளுந்தின் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும்.
கறுப்பு உளுந்து தோசை
தென் மாவட்டங்களில் முழு உளுந்து தோசை என்று சொல்வோம். உளுந்தைத் தோலோடு ஊற வைத்து அரைத்து, அரைத்த அரிசி மாவோடு கலந்து செய்யப்படும் தோசை. மிகவும் ருசியான தோசை. ஆரோக்கியமான தோசையும் கூட. தோலோடு உளுந்தை பயன் படுத்துவதால் உளுந்தின் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
இட்லி அரிசி, பச்சரிசி இரண்டையும் ஒன்றாகக் கழுவி ஒரு பாத்திரத்தில் மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
கறுப்பு உளுந்து, வெந்தயம் இரண்டையும் ஒன்றாகக் கழுவி ஒரு பாத்திரத்தில் ஒன்றாக ஊற வைக்கவும்.
- 3
மூன்று மணி நேரம் ஊறியதும் இட்லிஅரிசி, பச்சரிசி கலவையை அரைத்து ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். கறுப்பு உளுந்து, வெந்தயம் கலவையை நன்றாக அரைத்து அரைத்த அரிசி மாவோடு உப்பு சேர்த்து நன்கு கையால் கலந்து எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும்.
- 4
எட்டு மணி நேரம் கழித்து மாவை தோசைகளாக வார்க்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கறுப்பு உளுந்து தோசை (Karuppu ulunthu dosai recipe in tamil)
4உழக்கு அரிசி ஒரு உழக்கு., கறுப்பு உளுந்து ,ஒரு ஸ்பூன் வெந்தயம் ஊறப்போட்டு அரைத்து மறு நாள் தோசை சுடவும் ஒSubbulakshmi -
இரவு உணவு கறுப்பு உளுந்து தோசை
அரிசி 4உழக்கு, கறுப்பு உளுந்து 1உழக்கு ஊறப்போட்டு கழுவி தோலுடன் வெந்தயம் கலந்து அரைத்து உப்பு போட்டு பிசைந்து மறுநாள் தோசை சுடவும். தொட்டுக்கொள்ள பாசிப்பருப்பு, கேரட்,பீன்ஸ், தக்காளி, சாம்பார் பொடி,உப்பு கலந்து வேகவைத்து எண்ணெய் ஊற்றிகறிவேப்பிலை லி இலை போடவும் கடுகு,உளுந்து, பெருங்காயம் வறுத்து சேர்க்கவும். மல் ஒSubbulakshmi -
கறுப்பு கவுனி தோசை (Karuppu kavuni arisi dosai recipe in tamil)
#GA4#Week19Black riceஇந்த கறுப்பு கவுனி அரிசி மிகவும் உடலுக்கு நல்லது. நார்ச்சத்து மற்றும் வைட்டமின் நிறைந்த அரிசி. அந்த காலத்தில் அரசர்கள் மட்டுமே சாப்பிடுவார்கள். கை, கால் வலிக்கு சிறந்த அரிசி. எங்கள் வீட்டில் daily இந்த கறுப்பு கவுனி அரிசி தோசை, இட்லி சாப்பிடுகிறோம். Sundari Mani -
கம்மம்புல் தோசை
#காலைஉணவுகள்பள்ளி விடுமுறை நாட்களில் பாட்டி வீட்டுக்குச் செல்ல எனக்கு மிகவும் பிடிக்கும். பாட்டி பேரன் பேத்திகளைக் கண்டதும் விதவிதமான உணவு வகைகளை சமைப்பார்கள். பாட்டி செய்யும் சுவையான உணவு வகைகளில் கம்மம் புல் தோசையும் ஒன்று. என் பேரனுக்கும் கம்மம் புல் தோசை மிகவும் பிடிக்கும். நம்முடைய உணவுப் பழக்கவழக்கங்களை தலைமுறை கடந்து நாம் கொண்டு செல்ல வேண்டும். Natchiyar Sivasailam -
பலதானிய தோசை(Multigrain Dosa recipe in Tamil)
#milletகம்பு, கேழ்வரகு,சோளம் மக்காச்சோளம்,உளுந்து,அரிசி கொண்டு செய்யப்படும் தோசை ஆகும். பல தானியங்களைக் கொண்டு செய்யப்படுவதால் தோசை மாவில் பல சத்துக்கள் அடங்கியுள்ளன. Senthamarai Balasubramaniam -
கறுப்பு உளுந்து சாதம் (Karuppu ulundhu satham recipe in tamil)
ஒருபங்கு அரிசி கால்பங்கு உளுந்து. வெந்தயம் ஒருஸ்பூன்.தேங்காய் கால் மூடி திருகியது.ஒரு ஸ்பூன் உப்பு .உளுந்து வெந்தயம் வறுத்து அரிசி கழுவி உளுந்து கழுவி இதனுடன் வெந்தயம் 5பூண்டு பல்கலந்து 3பங்கு தண்ணீர் ஊற்றி அகலமான பிரசர் பேனில் வேவிடவும்.பின் தேங்காய் பூ சேர்க்கவும் ஒSubbulakshmi -
மிருதுவான இட்லிக்கு மாவு அரைக்கும் முறை (Idli maavu recipe in tamil)
டிப்ஸ்:# மாவு அரைக்க ஐஸ் வாட்டரை பயன்படுத்தவும். இதனால் மாவின் உபரி அதிகம் கிடைக்கும். மேலும் இட்லி தோசை இரண்டும் சாப்டாக இருக்கும்.# இட்லி அரிசியும் பச்சரிசியும் சரி சம அளவு சேர்க்க வேண்டும் என்பது இல்லை. இட்லி அரிசியை அதிகாகவும் பச்சரிசி குறைவாகவும் சேர்க்கலாம். ரேஷன் அரிசியும் பயன்படுத்தலாம்.#சோடா பயன்படுத்த கூடாது.# உளுந்தை ஊற வைக்கும் போது பிரிஜ்ஜில் வைத்து ஊற விடலாம். அல்லது தோல் உளுந்து பயன் படுத்துபவர் ஐஸ் வாட்டரை பயன் படுத்தலாம்.#புதிய உளுந்தாக இருந்தால் மாவு அதிகம் வரும். பழைய உளுந்து பயன் படுத்தினால் அளவு சற்று அதிகம் தேவைப்படும்.#மாவு அரைத்த பின்னர் இரண்டு வேறு வேறு பாத்திரத்தில் பிரித்து வைத்து பயன் படுத்தினால் அதிக நாட்கள் மாவு நன்றாக இருக்கும்.#இட்லி தோசை ஊற்றிய பின்னர் மீதம் உள்ள மாவில் கரண்டி போட்டு மூடி வைக்க கூடாது. கரண்டியுடன் மாவை பிரிஜ்ஜில் வைத்தாலும் மாவு நீர்த்து புளித்து விடும்.# அவல் (poha) இல்லை எனில் சவ்வரிசி பயன் படுத்தலாம். ஆனால் சவ்வரிசி மலச்சிக்கலை ஏற்படுத்தும்.# மாவை அரைத்து கலக்கும் போது அதிகம் கெட்டியாகவும் அல்லது அதிக தண்ணீராகவும் இல்லாமல் பார்த்து கொள்ளவும். அதிகம் கெட்டியாக தெரிந்தால் கிரைண்டர் கழுவிய தண்ணீரை சிறிது சேர்த்து கொள்ளலாம்.#சிலர் மாவை கையினால் கரைத்தால் அதிகம் புளித்து விடும். அவர்கள் கரண்டியை பயன்படுத்தி கரைக்கலாம். Manjula Sivakumar -
உளுந்து அடை
மிகவும் ஆரோக்கியமானது வடைக்கு பதில் இப்படியும் உளுந்தை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். Kamala Shankari -
கறிவேப்பிலை வெங்காய தக்காளி தோசை (திடீர் தோசை)
இது ஒரு திடீர்னு செய்யக்கூடிய தோசை. கறிவேப்பிலை அதிகம் சேர்த்துள்ளதால் சத்தானதும் கூட. #arusuvai6 Renukabala -
-
# வட்டார சமையல் மாம்பழ மாதுளை தோசை
மாம்பழ சீசன் என்பதால் மாம்பழத்தையும் மாதுளை உடலுக்கு மிகவும் நல்லது என்பதால் தோசை மாவுடன் கலந்து செய்தால் என்ன என்று தோன்றியதால் மாம்பழ மாதுளை தோசையை செய்தேன் Jegadhambal N -
மாப்பிள்ளை சம்பா அரிசி தோசை
#Everyday1இப்போது ஆரோக்கியத்தை தேடிக் கொண்டிருக்கும் வேளையில் அந்தத் தேடலில் கிடைத்த அரிசி வைத்து செய்த இந்த தோசை அனைவருக்கும் பிடித்திருந்தது. எண்ணற்ற சத்துக்கள் நிரம்பியுள்ள இந்த அரிசியை உபயோகித்து நீங்களும் ஆரோக்கியமாக வாழலாம். Azhagammai Ramanathan -
கேழ்வரகு வெந்தய தோசை (Kelvaraku venthaya dosai recipe in tamil)
சத்துக்கள் நிறைய உள்ள முழு ராகிஅல்லது கேழ்வரகு, வெந்தயம், உளுந்து அரைத்து செய்த இந்த தோசை மிகவும் சுவையாகவும், மொறுமொறுப்பாகவும் இருந்தது. மிகவும் சுலபமான இந்த சத்தான தோசையை எளிமையான முறையில் அனைவரும் செய்து சுவைக்கவே நான் இங்கு பதிவிட்டுள் ளேன்.#GA4 #week2 Renukabala -
சூப்பர் சாஃப்ட் நெய் இட்லி
புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த மல்லி பூ போல இட்லி . இட்லி சாம்பார் ஒரு முழு உணவு . மிகவும் ஆரோக்கியமான நான் எப்பொழுதும் மாவுடன் ஈஸ்ட் சேர்ப்பேன். அமெரிக்காவில் அப்பொழுதுதான் இட்லி பொங்கும். ஈஸ்ட் ஒரு செல் (single cell protein) புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். #combo1 Lakshmi Sridharan Ph D -
பஞ்சு இட்லி
#combo1 தென்னிந்திய உணவான இட்லியானது அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை ஊற வைத்து அரைத்து புளிக்க செய்து பின் வேக வைத்து சாப்பிடுவதால், இதில் கார்ப்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாகவும், க்ளுட்டன் இல்லாமலும் உள்ளது. Ilakyarun @homecookie -
ரவா தோசை(rava dosa)#GA4/week 25/
அரிசி மாவு ,மைதா, ரவை மூன்றும் கலந்து செ,ய்வது ரவா தோசை வீட்டில் தோசை மாவு இல்லாத சமயத்தில் கை கொடுப்பது ரவா தோசை Senthamarai Balasubramaniam -
#அரிசிவகைஉணவுகள் சுவையான அடை தோசை ரெசிபி!
அடை தோசை மிகவும் அருமையான, ஆரோக்கியமான உணவு. பெரும்பாலான பருப்பு வகைகள் கலந்து இதை செய்வதால் நாள்முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்க முடியும். மேலும் குழந்தைகள் ஆரோக்கியத்திற்கு அடை தோசை ஆகச் சிறந்தது. இத்தகைய சுவைமிகுந்த அடை தோசையை எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம். SaranyaSenthil -
மொறு மொறு ஆரிய தோசை(crispy dosa recipe in tamil)
சாதாரணமாக ராகி மாவில் அரிசி மாவு கலந்து செய்யும் ராகி தோசையை விட முழுதாகியை ஊற வைத்து ராகி தோசைக்கு ஆட்டினால் மிகவும் மொறுமொறுப்பாக வரும். Meena Ramesh -
மல்லிகைப்பூ இட்லி
#Combo1ரேஷன் அரிசியில வெள்ளையா மல்லிகைப்பூ நிறத்தில பஞ்சு போல இட்லி செய்யலாம் வாங்கஇட்லிங்கறது பல பேருக்கு, பல விதம், மாவு அரைப்பதில் இருந்து, ஆவியில் வேக வைத்து எடுப்பது வரை, ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பதம், பக்குவம் உண்டு, இது எங்க அம்மா கிட்ட இருந்து கத்துகிட்டது , இதுக்கு ஏன் மல்லிகைப்பூ இட்லி என்று பெயர்னா, மல்லிகைப்பூ மாதிரி வெள்ளையா பஞ்சு மாதிரி இருக்கும் இது செய்வது பெரிய கஷ்டம் எல்லாம் இல்லை இதற்கு சின்ன சின்ன டிப்ஸ் தான் , முயற்சி செய்து பாருங்கள்குறிப்பு:பல பேர் இட்லி மற்றும் தோசை இரண்டிற்கும் ஒரே மாவை ஆட்டி சுடுவாங்க இந்த இட்லிக்கு இந்த மாவை தனியா தான் ஆட்ட வேண்டும் இதில் தோசை வார்க்க முடியாது ஏனெனில் இதில் வெந்தயம் சேர்ப்பதில்லை தோசை சிவந்து மொறுமொறுப்பாக வர வெந்தயம் அவசியமாகும் Sudharani // OS KITCHEN -
புரொட்டீன் பால்ஸ்
நம் உடலுக்கு தேவையான புரொட்டீன் சத்து பயறு வகைகளில் நிறைந்துள்ளது. கறுப்பு உளுந்தை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது. கறுப்பு உளுந்து நம் முழு உடல் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. பெண்குழந்தைகளுக்கு மாதவிடாயை சீராக்கும். மாதவிடாயின் போது ஏற்படும் வலியைக் குறைக்கும். இடுப்பெலும்பு வலுவடையும். உளுந்தைப் பயன் படுத்தி பல்வேறு உணவு வகைகளைத் தயாரிக்கலாம். Natchiyar Sivasailam -
மைசூர் மசாலா தோசை (Mysore masala dosai recipe in tamil)
நல்ல காரம், பூண்டு வாசனை கலந்த ருசியான மசாலா தோசை.#breakfast Lakshmi Sridharan Ph D -
பருப்பு அடை தோசை
#GA4 நான்கு வகையான பருப்புகள் கலந்து செய்த அடை தோசை. மிகவும் சத்தானது. Meena Ramesh -
-
கருப்பு உளுந்து இட்லி
# இட்லி கறுப்பு உளுத்தம்பருப்பில் பெரும்பாலான பருப்பு வகைகளை விட அதிக புரத சத்து கொண்டுள்ளது. இது நார்ச்சத்து, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், இரும்பு, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் என அனைத்து சத்துக்களும் நிறைந்தது. பெண்களின் இடுப்பு எலும்பு வலுவூட்டும் .ஆகவே பூப்படையும் பொழுதும் கர்ப்ப காலத்திலும் இதில் உழுத்தங்களி செய்து கொடுப்பார். நம்ம உடலுக்கு புத்துணர்ச்சி எலும்புக்கு வலு, ஆரோக்கியமான இதயத்திற்கும் , சுலபமான செரிமானத்திற்கும் என அனைத்து விதமான ஆரோக்கியத்துக்கும் இந்த கருப்பு வந்து மிகவும் உபயோகப்படுகிறது . இதனை இட்லி பொடி உளுந்து களி அல்லது இதுபோல் இட்லி என செய்து சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு கொடுத்து பழகுங்கள். BhuviKannan @ BK Vlogs -
தோல் உளுந்து தோசை (black urad dal dosa recipe in Tamil)
#ds பருவமடைந்த பெண் பிள்ளைகளுக்கு இந்த தோசையை கொடுத்தால் உடலுக்கு மிகவும் சத்தும் ஆரோக்கியமும் கிடைக்கும்.. இது எளிதில் ஜீரணமாகக் கூடியது என்பதால் சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்... Muniswari G -
-
#காம்போ 1 ஸாவ்ட் இட்லி தேங்காய் சட்னி
5கப் இட்லி புழுங்கலரிசி 2கப் புழுங்கலரிசி 21/2கப் முழு உளுந்து தனித்தனியாக 5மணிநேரம் ஊற வைத்து முதலில் உளுந்தையும் பிறகு அரிசியையும் அரைத்து கலந்து இட்லி செய்தால் மிகவும் ஸாவ்டாக வரும் Jegadhambal N -
-
மல்டி க்ரேய்ன் அடை தோசை (Multi grain adai dosai recipe in tamil)
#jan1#week1ஐந்து விதமான பருப்பு மற்றும் பயறு அரிசி கீரை தேங்காய் வெங்காயம் பெருங்காயம் அனைத்திலும் உள்ள சத்துக்கள் இந்த ஒரே தோசையில் கிடைக்கும் மிகவும் ருசியான ஹெல்தியான தோசை Vijayalakshmi Velayutham -
கருப்பு உளுந்து தோசை(karuppu ulunthu dosai recipe in tamil)
#welcome பெண்களுக்கு மிக நல்லது கருப்பு உளுந்து, தோளில் தான் பாக்டீரிய, கால்சியமும், பாஸ்பரஸும் அதிக அளவு உள்ளது. ஆனால் கருப்பு உளுந்தை பயன்படுத்தினால் இட்லி, தோசை, வடையின் நிறம் மாறிவிடுகிறது என்பதால் பலரும் வெள்ளை உளுந்தை நாடுகிறார்கள். வாரம் ஒருமுறையாவது கருப்பு உளுந்தை பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. Anus Cooking
More Recipes
கமெண்ட்