எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. எண்ணெய் - 2 தேக்கரண்டி
  2. கடுகு - 1/2 ஸ்பூன்
  3. வெந்தயம் - 1/4 ஸ்பூன்
  4. சின்ன வெங்காயம் -15
  5. தக்காளி - 2
  6. புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
  7. தேங்காய் துண்டுகள் -15
  8. பூண்டு - 4பல்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தேங்காய் துண்டுகள், பூண்டு, சீரகம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றவும்.எண்ணெய் சூடானதும் கடுகு சேர்க்கவும் கடுகு பொறிந்தவுடன் வெந்தயம், கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும் வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் சிறிது சிறிதாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும் தக்காளி வதங்கியதும் முருங்ககைக் காயை துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும் பின்னர் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து 2லிருந்து 3 நிமிடங்கள் வரை நன்றாக வதக்கவும் பின்னர் புளியை நன்றாக கரைத்து சேர்க்கவும்
    பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேகவைக்கவும்.

  3. 3

    முருங்கைக் காய் நன்றாக வெந்தவுடன் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்க்கவும் பின்னர் தேவையான அளவு குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Keerthana S
Keerthana S @Keerthana1308
அன்று

Similar Recipes