கோதுமை மாவு சப்பாத்தி (Wheat Flour Chapathi Recipe in Tamil)

kavi murali
kavi murali @kavimurali_cook
Chennai

#combo2
*அனைவருக்கும் கோதுமை சாப்பிட்டால் நல்லது என்று தெரியும். ஆனால் அந்த கோதுமையில் என்ன நன்மை கிடைக்கும் என்று யாருக்குமே சரியாக தெரியாது.

*தினமும் கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்தமாகும்.

*இதய நோய் உள்ளவர்கள், கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இதயம் வலிமையாக இருக்கும்.

* உடல் எடையை குறைக்க நினைப்போர் மைதாவை தவிர்த்து, கோதுமையை சாப்பிடுவது மிகவும் நல்லது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1/2 கிலோ கோதுமை மாவு
  2. 3/4 டேபிள் ஸ்பூன் உப்பு
  3. 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  4. தண்ணீர் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

35 நிமிடங்கள்
  1. 1

    ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் இப்பொழுது தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி நன்கு பிசைந்து கொண்டு இறுதியாக எண்ணெய் ஊற்றி கையில் ஒட்டாதவாறு பிசைந்து கொள்ளவும். இதனை சிறு உருண்டைகளாக உருட்டி சிறிது கோதுமை மாவை தூவி சப்பாத்தி கல்லில் வைத்து வட்டமாக செய்து கொள்ளவும்.

  2. 2

    இப்பொழுது சப்பாத்தி கட்டை வைத்து வட்டமாக தேய்த்துக் கொள்ளவும். ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றி வட்டமாகத் தேய்த்து வைத்த கோதுமை மாவை போட்டு சிறிது பொன்னிறமாக வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    இப்பொழுது தோசைக்கரண்டியை வைத்து மெதுவாக அழித்துவிட்டால் சப்பாத்தி சிறிது உப்பாலாக வரும்.

  4. 4

    இதேபோல் மறுபுறமும் செய்ததும் நெய்யை தடவி எடுத்தால் மிருதுவான சப்பாத்தி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

kavi murali
kavi murali @kavimurali_cook
அன்று
Chennai
வானவில்தோன்றும் போதுவானம் அழகாகிறதுநம்பிக்கைதோன்றும் போதுவாழ்க்கை அழகாகிறது...
மேலும் படிக்க

Similar Recipes