சப்பாத்தி பரோட்டா & வெஜ் சால்னா(Chapathi parrota&salna)

சப்பாத்தி பரோட்டா & வெஜ் சால்னா(Chapathi parrota&salna)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு,தேவையான அளவு உப்பு சேர்த்து பிசையவும்.
- 2
சப்பாத்திக்கு பிசைவது போல் பிசையவும். ஒரு ஐந்து நிமிடம் ஊற வைக்கவும்.
- 3
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு கடல்பாசி சேர்த்து பொரிக்கவும். சோம்பு சேர்த்து நன்றாக பொரிந்த பின்பு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி கொள்ளவும்.
- 4
இந்த பச்சை மிளகாய் தக்காளி இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். குழந்தைகளுக்கு பிடித்தமான காய்கறிகள் சேர்த்துக் கொள்ளலாம்
- 5
தக்காளி நன்றாக வதங்க சிறிதளவு உப்பு சேர்த்து கொள்ளவும். நன்றாக தக்காளி வதங்கியதும் கொத்தமல்லி இலை புதினா இலை சேர்த்து கொள்ளவும். மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
- 6
காரத்திற்கு ஏற்ப மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா தூள் சேர்த்துக் கொள்ளவும் மசாலா வாடை போகும் வரை நன்கு வதக்கி கொள்ளவும். பின்பு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- 7
ஒரு ஸ்பூன் கடலை மாவை கால் டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கரைத்து மசாலாவுடன் சேர்த்துக் கொள்ளவும்.
- 8
சிறிதளவு தேங்காய் முந்திரி பருப்பு கசகசா சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை சேர்த்துக் கொள்ளவும்.
- 9
நன்றாக கொதிக்க விடவும் இப்பொழுது சுவையான சால்னா தயார். பரோட்டா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
- 10
சப்பாத்தி மாவை சிறு உருண்டையாக எடுத்து சப்பாத்திக்கு தேய்ப்பது போல் இல்லாமல் மெல்லியதாகத் தேய்த்துக் கொள்ளவும். பிறகு நடுவில் எண்ணெய் தடவிக் கொள்ளவும்.
- 11
படத்தில் காட்டியவாறு மின்விசிறி மடக்குவது போல் மடக்கி உருட்டிக் கொள்ளவும்.
- 12
படத்தில் காட்டியவாறு நன்றாக உருட்டி நடுவில் அழுத்தம் கொடுக்கவும்.
- 13
மீண்டும் மாவில் புரட்டி சப்பாத்திக்கு தேய்ப்பது போல் தேய்த்துக் கொள்ளவும்.
- 14
பின்பு, தோசைக்கல்லில் சுட்டுக் கொள்ளவும். சுவையான கோதுமை பரோட்டா சால்னா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
குஸ்கா மற்றும் சால்னா (Kuska and salna recipe in tamil)
#salnaஈஸியான முறையில் குஸ்கா செய்யலாம்.வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செய்யலாம். Sharmila Suresh -
பரோட்டா சால்னா
எல்லாருக்குமே பரோட்டா ரொம்ப பிடிக்கும். அதை கடையில் நரைய விதத்தில் செய்கிறார்க்கள். ஏன் நிறைய கடைகளில் அழுகிய தக்காளி வெங்காயம் போட்டு கூட சில சமயங்களில் காசுக்காக சுத்தம் இல்லாமல் செய்கிறார். அதனால் இனிமேல் கடைகளில் வாங்காமல் வீட்டில் சுத்தமாக செய்து நம் குழந்தைகளுக்கு கொடுக்கலாமே... தயா ரெசிப்பீஸ் -
-
சால்னா (Salna recipe in tamil)
#ilovecooking சால்னா புரோட்டா சப்பாத்தி இட்லி மற்றும் தோசைக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே மிகவும் ருசியாக செய்திடலாம். Mangala Meenakshi -
புதினா கொத்தமல்லி சாதம் & உருளைக்கிழங்கு மசாலா (Puthina kothamalli satham recipe in tamil)
#kids3lunchbox recipe Shobana Ramnath -
வெஜ் சால்னா (Veg Salna recipe in Tamil)
#coconut*சால்னா என்றவுடன் புரோட்டாவே நினைவில் நிற்கும். ஓட்டல்களில் செய்யும் ருசியான சால்னாவைப் போலவே வீட்டிலும் எளிதில் செய்யலாம். சுவையான வெஜ் சால்னா செய்முறை பற்றிப் பார்ப்போம்.* இதில் அனைத்து வகை காய்கறிகள் சேர்த்து செய்வதால் குழந்தைகளுக்கு அனைத்து விதமான சத்துக்கள் நிறைந்த உணவாக இருக்கும்.*இது சைவ பிரியர்களுக்கு ஏற்ற வெஜ் சால்னா. kavi murali -
சால்னா(salna recipe in tamil)
#clubபுரோட்டா சப்பாத்தி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் மணமும் ருசியும் மிகவும் நன்றாக இருக்கும் மிகவும் எளிதாக செய்யலாம் Sudharani // OS KITCHEN -
ஹோட்டல் சுவையில் வெஜ் சால்னா#cool
கூல் ஹோம் கிட்சன் யூடியூப் சேனல் பார்த்து டின்னருக்கு செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது ஹோட்டலில் செய்யும் சால்னா டேஸ்ட் இருந்தது Sait Mohammed -
வெஜ் சால்னா (Veg salna recipe in tamil)
#salna# பரோட்டா, சப்பாத்தி என அனைத்திற்கும் ஏற்ற வெஜ் சால்னா. சிக்கன், மட்டன் சால்னாவை சுவையை மிஞ்சும் அளவிற்கு. Ilakyarun @homecookie -
-
-
வெஜ் சால்னா(veg salna recipe in tamil)
#WDYபிரியா ரமேஷ் கிச்சன் அவர்களது ரெசிபி. இன்று நான் செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது. joycy pelican -
-
-
-
-
வெஜிடபிள் சாதம் (Vegetable briyani recipe in tamil)
#kids#Lunchboxகுழந்தைகள் காய்கறிகள் விரும்பி சாப்பிடமாட்டார்கள்,இப்படி சாதத்தில் சேர்த்துக் கொடுக்கலாம்.குழந்தைகளுக்கு விருப்பமான காய்கறிகள் சேர்த்துக் கொள்ளவும். Sharmila Suresh -
-
கேரட் சாதம்🥕🥕🥕🥕
#kids3#lunchbox# கேரட்டில் வைட்டமின் 'சி' உள்ளதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. கேரட்டை உணவில் அடிக்கடி சேர்ப்பது குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும். Ilakyarun @homecookie -
-
-
வெஜ் சால்னா
magazine 3 ரெஸ்டாரன்ட் ஸ்டைல் வெஜ் சால்னா நான் வீட்டில் செய்து பார்த்தேன் மிகவும் ஈஸியாக இருந்தது அதனால் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் . Sasipriya ragounadin -
-
சப்பாத்தி-கருப்பு சுண்டல் கிரேவி
#magazine3இந்த கிரேவி பிளைனாகவோ அல்லது கருப்பு சுண்டல் அல்லது பட்டாணி உருளைக்கிழங்கு அல்லது விரும்பிய காய்கறிகள் சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.இந்த கிரேவியில், மல்லி,புதினா இலைகள் மற்றும் கல் பாசி முக்கிய பங்கு வகிப்பதால் கண்டிப்பாக சேர்க்க வேண்டும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
More Recipes
கமெண்ட்