சோயா,பன்னீர் தம் பிரியாணி (soya,paneer Dum Biryani)
சமையல் குறிப்புகள்
- 1
தம் பிரியாணி செய்ய மேலே கொடுத்துள்ள தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.
- 2
பன்னீர்,சோயாவை கழுவி எடுத்து வைக்கவும்.
- 3
பன்னீரை நன்கு கழுவி, நெய் சேர்த்து வறுத்து வைத்துக் கொள்ளவும்.
- 4
சோயாவை அதே வாணலியில் போட்டு வறுத்து எடுத்து வைக்கவும்.
- 5
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வாணலியில் போட்டு பொன்னிறமாக பிரவுன் கலர் வரும் வறுத்து எடுக்கவும். பின் முந்திரியை சேர்த்து நன்கு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 6
தாளிக்க தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.
- 7
மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 8
பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய்,பட்டை, கிராம்பு, ஏலக்காய், உப்பு, தண்ணீரை சேர்த்து கொதித்ததும் அரிசியை நன்கு கழுவி பத்து நிமிடங்கள் ஊற வைத்து சேர்த்து பாதி வெந்ததும்,தண்ணீரை வடித்து விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 9
வாணலியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் நெய் சேர்த்து பட்டை,கிராம்பு, சீரகம்,ஏலக்காய்,பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கவும்.பின் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கி,நறுக்கிய, வெங்காயம்,தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 10
தக்காளி சேர்த்து வதக்கி யவுடன் மிளகாய் தூள், தனியாத்தூள்,கரம் மசாலத்தூள் சேர்த்து வதக்கவும்.
- 11
அதன் பின் வறுத்து வைத்துள்ள பன்னீர், சோயாவை சேர்த்து நன்கு வதக்கவும்.பின் தயிர் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- 12
வேறு ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் கொஞ்சமாக நெய் ஊற்றி, ஒரு லேயர் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து,அதன் மேல் பிரவுன் கலராக வறுத்து வைத்துள்ள வெங்காயம்,முந்திரி,மல்லி, புதினா தூவி, பின் பன்னீர், சோயாவை தூவி,பின் அடுத்த லேயர், இதே போல் இரண்டு, மூன்று லேயர் வைத்து கடைசியாக,வெங்காயம், மல்லி, புதினா, முந்திரி, எலுமிச்சை சாறு,ஒரு ஸ்பூன் நெய் தூவி மூடி வைக்கவும்.
- 13
இரண்டு அல்லது மூன்று லேயர் வைத்து, தோசை தவாவை ஸ்டவ்வில் வைத்து ஐந்து நிமிடங்கள் சூடானதும் அதன் மேல் பிரியாணி தயார் செய்து வைத்துள்ள பாத்திரத்தை வைத்து அலுமினிய ஃபாயில்
பேப்பர் வைத்து பின் மூடி போட்டு வைக்கவும். - 14
மிதமான சூட்டில் பதினைந்து நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் சுவையான தம் பிரியாணி தயார்.
- 15
எடுத்து பரிமாறும் பிளேட்டில் வைத்து வெங்காயம், தக்காளி கட் செய்து வைத்து பரிமாறவும். இப்போது மிகவும் சுவையான பன்னீர் சோயா தம் பிரியாணி சுவைக்கத்தயார்.
- 16
இதே முறைப்படி வெஜ், மட்டன், சிக்கன் எல்லாம் சேர்த்து செய்யலாம். அனைவரும் செய்து சுவைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சோயா உருளைக்கிழங்கு தம் பிரியாணி (Soya potato dum biryani recipe in tamil)
#BRநிறைய விதத்தில் பிரியாணிகள் செய்கிறோம். ஆனால் நான் இன்று சத்துக்கள் நிறைந்த சோயா பால்ஸ் வைத்து தம் பிரியாணி செய்து பார்த்தேன். வித்தியாசமாக, மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
-
-
-
-
-
மஷ்ரூம் தம் பிரியாணி
#vattaram#week8 - Ambur dum biriyani... மஷ்ரூம் வைத்து நான் செய்த தம் பிரியாணி செய்முறையை இங்கு பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
-
ஆம்பூர் தம் பிரியாணி (Ambur Dum Biryani)
ஆம்பூர் தம் பிரியாணி சைவம்,அசைவம் இரண்டிலும் செய்யலாம்.நான் இங்கு காய்கறிகளை வைத்துத்தான் செய்துள்ளேன். சுவை மிகவும் அருமையாக இருந்தது.#Vattaram Renukabala -
பன்னீர் பிரியாணி (Paneer biryani recipe in tamil)
#GA4 #biraiyani #panneer Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
தக்காளி பட்டாணி பிரியாணி (Tomato green peas biryani recipe in tamil)
தக்காளி பிரியாணி பார்ப்பதற்கு மிகவும் அழகான வண்ணத்திலும் நல்லதோர் சுவையுடனும் இருக்கும். இத்துடன் பச்சை பட்டாணி சேரும் போது இன்னும் சுவையான அதிகரிக்கும்.#TRENDING #BIRYANI Renukabala -
சோயா பிரியாணி (Soya chunks biryani recipe in tamil)
#Grand2#GA4 #Biryaniகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சோயா சங்ஸ் , காய்கறிகள் சேர்த்து செய்த பிரியாணி மிகவும் அருமையாக இருக்கும். Azhagammai Ramanathan -
காளான் பன்னீர் தம் பிரியாணி
#NP1 சீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த தம் பிரியாணி மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி
#vattaram #week8ஆம்பூர் என்றாலே மட்டன் பிரியாணி பிரபலமானது. இதை நான் செய்து பார்த்து உங்களுடன் பகிர்ந்துள்ளேன். சுவை அட்டகாசமாக இருந்தது. Asma Parveen -
-
காளான் பன்னீர் பட்டாணி பிரியாணி (Mushroom paneer peas biryani recipe in tamil)
காளானுடன் பன்னீர் மற்றும் பட்டாணி போடுவதால் மிகவும் சுவையாக இருக்கும். பிரியாணி சாப்பிடாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT Renukabala -
-
சோயா பிரியாணி (Soya biryani recipe in tamil)
சோயா நன்மைகள் நிறைந்த உணவு .மற்றும் இரத்த சோகை தீர்க்கும். இதை நிறைய உணவில் சேர்த்துக் கொள்ளவது நன்று. Lakshmi -
-
-
முந்திரிப்பால் காளான் பிரியாணி (Mushroom biryani with cashew milk recipe in tamil)
காளான் பிரியாணி முந்திரிப்பருப்பு, கசகசாஅரைத்து சேர்த்து செய்துள்ளேன். அதனால் நல்ல சுவையும் மணமும் இருந்தது.#CF8 Renukabala -
-
ஸ்ட்ரீட் புட் எம்டி பிரியாணி (Street food Plain biryani recipe in tamil)
#Thechefstory #ATW1எம்டி பிரியாணி எல்லா நகரங்களிலும் ஒரு முக்கியமான ஸ்ட்ரீட் புட். நான் செய்துள்ளது மங்களூர் ஸ்டைல் ஸ்ட்ரீட் புட் எம்டி பிரியாணி. மிகவும் அருமையான சுவையில் இருந்தது. Renukabala -
-
தாமரை விதை பிரியாணி (Makhana biryani recipe in tamil)
#BRதாமரை விதை உணவுகள் விரத நாட்களில் பெரும்பாலான மக்கள் சாப்பிடுவார்கள். இது நிறைய நேரம் பசி தாங்கி உடம்பை சோர்வடையாமல் இருக்கச் செய்யும். உடல் எடையை குறைக்க உதவும். எனவே இங்கு சத்தான தாமரை விதை பிரியாணி செய்து பகிர்ந்துள்ளேன். Renukabala -
மீல்மேக்கர்/ சோயாபீன்ஸ் பிரியாணி (Mealmaker biryani recipe in tamil)
மட்டன் சிக்கன் பிரியாணி போன்ற சுவையில் சோயா பிரியாணி Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
கமெண்ட் (4)