எளிமையான உணவு - இடியாப்பம்

Sai's அறிவோம் வாருங்கள்
Sai's அறிவோம் வாருங்கள் @cook_432449

#combo #combo3

இடியாப்பம் குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் சிறந்த உணவாகும். ஆவியில் வெந்த உணவு என்பது எளிதில் செரிமானம் ஆகிவிடும்.

குறிப்பு : இடியாப்ப கட்டையில் இறுதியில் ஒட்டிக் கொண்டிருக்கும் மாவை சிறு கொழுக்கட்டைகளாக உருண்டி வைக்கலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்

எளிமையான உணவு - இடியாப்பம்

#combo #combo3

இடியாப்பம் குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் சிறந்த உணவாகும். ஆவியில் வெந்த உணவு என்பது எளிதில் செரிமானம் ஆகிவிடும்.

குறிப்பு : இடியாப்ப கட்டையில் இறுதியில் ஒட்டிக் கொண்டிருக்கும் மாவை சிறு கொழுக்கட்டைகளாக உருண்டி வைக்கலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 2 ஆழாக்குஇடியாப்ப மாவு -
  2. 1 பங்கு மாவிற்கு 2 பங்கு வெந்நீர்
  3. தேவையான அளவுஉப்பு -
  4. 3 ஸ்பூன்நல்லெண்ணெய் -

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    இடியாப்ப மாவில் உப்பு, 2 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்க்கவும்

  2. 2

    சூடான நீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கரண்டி காம்பு அல்லது ஸ்பூன் வைத்து ஆரம்பத்தில் பிசையவும்.

  3. 3

    மாவை அச்சில் வைக்க ஏதுவாக உருண்டி கொள்ளவும்

  4. 4

    இட்லி பானையில் தண்ணீர் விட்டு மூடி அடுப்பில் வைத்து விட்டு மாவை உருண்ட வேண்டும்

  5. 5

    அச்சிலும், பிழியும் கட்டையிலும் சொட்டு எண்ணெய் விட்டு நன்றாக தடவிக் கொள்ள வேண்டும்

  6. 6

    இட்லி துணியை நினைத்து பிழிந்து இட்லி தட்டில் பரப்பி விட்டு, மாவை அச்சில் நிறப்பவும்

  7. 7

    தட்டு முழுவதும் சமமாக பிழிய வேண்டும்

  8. 8

    தண்ணீர் கொதித்து கொண்டிருக்கும் இட்லி பானையை திறந்து, இடியாப்பம் பிழிந்து வைத்திருக்கும் தட்டை அந்த ஆவியில் வைத்து மூடவும்

  9. 9

    ஆவியில் வேக 5 முதல் 7 நிமிடங்கள் ஆகும். வெந்தவுடன் எடுத்து தேங்காய் பாலுடன் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sai's அறிவோம் வாருங்கள்
அன்று

Similar Recipes