"திருநெல்வேலி தேங்காய்பால் சொதிக்குழம்பு" #Vattaram #Week-4

Jenees Arshad
Jenees Arshad @NJA89912126

#Vattaram
#Week-4
#வட்டாரம்
#வாரம்-4
#திருநெல்வேலி "தேங்காய் பால் சொதிக்குழம்பு"
#Thirunelveli "Coconut Milk Sodhi Kulambu"

"திருநெல்வேலி தேங்காய்பால் சொதிக்குழம்பு" #Vattaram #Week-4

#Vattaram
#Week-4
#வட்டாரம்
#வாரம்-4
#திருநெல்வேலி "தேங்காய் பால் சொதிக்குழம்பு"
#Thirunelveli "Coconut Milk Sodhi Kulambu"

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. திருநெல்வேலி "தேங்காய்பால் சொதிக்குழம்பிற்கு" தேவையான பொருட்கள்:
  2. 1கேரட்-
  3. 12பீன்ஸ்-
  4. 2உருளைக்கிழங்கு-
  5. 1முருங்கைக்காய்-
  6. 75கிராம்பச்சை பட்டாணி-
  7. 50கிராம்பாசிப் பருப்பு-
  8. தேவையான அளவுஉப்பு தூள்-
  9. தேவையான அளவுதண்ணீர்-
  10. 2டீஸ்பூன்பொட்டுக்கடலை-
  11. 1தேங்காய்-மூடி(தேங்காய் பால்)
  12. 1/2இன்ச்இஞ்சி-
  13. தாளிப்புக்கு தேவையான பொருட்கள்:
  14. 2டீஸ்பூன்நல்லெண்ணெய்-
  15. 1/2டேபிள் ஸ்பூன்கடுகு-
  16. 1பட்டை-துண்டு
  17. 2கிராம்பு-
  18. 2ஏலக்காய்-
  19. 1பிரியாணி இலை-
  20. 3பூண்டு-பல்
  21. 2பச்சை மிளகாய்-
  22. தேவையான அளவுகொத்துமல்லித்தழை-
  23. 7சின்ன வெங்காயம்-
  24. 3கருவேப்பிலை-கொத்து
  25. 1/2டீஸ்பூன்மஞ்சள் தூள்-
  26. தேவையான அளவுஉப்பு தூள்-

சமையல் குறிப்புகள்

  1. 1

    (1கேரட்,12பீன்ஸ்,1முருங்கைக்காய், 2உருளைக்கிழங்கு),75கிராம் பச்சை பட்டாணி.இவை அனைத்தையும் 1இஞ்ச் அளவு பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும்.

  2. 2

    50கிராம் பாச்ப் பருப்பை நன்றாக கழுவி சுத்தம் செய்து 10நிமிடம் ஊரவைக்கவும்.

    பிரஸ்ஸர் குக்கரில் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

  3. 3

    அடுத்து டயர்,வெயிட் போட்டு பிரஸ்ஸர் குக்கரை மூடி 3விசில் விட வேண்டும்.

    பாசிப்பருப்பு தயார்.....

  4. 4

    2டீஸ்பூன் பொட்டுக்கடலையை மிக்ஸி ஜாரில் போட்டு பவுடர் செய்துக் கொள்ளவும்.

    பொட்டுக்கடலை மாவு தயார்...

    (பொட்டுக்கடலை மாவு சேர்ப்பதனால் குழம்பு பதத்தில் திக் ஆக இருக்கும் சொதிக்குழம்பு)...

  5. 5

    1மூடி தேங்காயை சிறிய துண்டுகளாக அரிந்து மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும்.

    அரைத்த தேங்காயை கெட்டியாக பால் பிளிந்து வடிகட்டிக் கொள்ளவும்.

  6. 6

    1/2இன்ச் இஞ்சி துண்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி சாற்றை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

  7. 7

    1மூடி எலுமிச்சை பழத்தை பிளிந்துச் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

    தேங்காய் பால்,இஞ்சி சாறு,லெமன் சாறு தயார்....

  8. 8

    ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய காய்கறிகள் மூழ்கிர அளவுக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    தேவையென்றால் தேவையான அளவு உப்பு தூள் சேர்க்கவும்.மிதமான தீயில் மூடி வைத்து முக்கால் பதம் அளவிற்கு வேக வைக்கவும்.

  9. 9

    ஒரு பாத்திரத்தில் 2டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி.
    எண்ணெய் காய்ந்த பிறகு 1/2டீஸ்பூன் கடுகு போட்டு பொறியவிடவும்.பின் 1துண்டு பட்டை,2கிராம்பு,2ஏலக்காய்,1பிரியாணி இலை,3பல் பூண்டு,2பச்சை மிளகாய் அரிந்தது,3கொத்து கருவேப்பிலை,7சின்ன வெங்காயம் நீள வாகில் நறுக்கியது,1/2டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் இவையெல்லாம் போட்டு தாளித்து நன்றாக வதக்கவும்.

    அடுத்து வேகவைத்த காய்கறிகளை தண்ணீரோடு சேர்த்து தாளிக்கின்ற பாத்திரத்தில் சேர்த்து கொதிக்கவிடவும்.

  10. 10

    வேக வைத்த பாசிப் பருப்பு,2டீஸ்பூன் பொட்டுக்கடலை மாவு,1மூடி அரைத்த தேங்காயில் கெட்டியாக பால் பிளிந்து வடிகட்டிக் கொண்ட.தேங்காய் பால் 1பவுல் சேர்த்து சிறிது நேரம் நன்றாக கொதிக்கவிடவும்.

  11. 11

    2டீஸ்பூன் இஞ்சி சாறு,1டீஸ்பூன் எலுமிச்சை பழம் சாறு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

  12. 12

    தேவையான அளவு கொத்துமல்லித்தழை போட்டுக்கொள்ளவும்.

    "திருநெல்வேலி தேங்காய் பால் சொதிக்குழம்பு" தயார்....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jenees Arshad
Jenees Arshad @NJA89912126
அன்று

Similar Recipes