சிம்பிள் கார தண்ணி சட்னி

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#vattaram#week5....தண்ணி சட்னி... இந்த கார சட்னி செய்வது மிக சுலபம்... சீக்கிரத்தில் செய்துவிடலாம்...

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5நிமிடம்
2 பரிமாறுவது
  1. 8வரமிளகாய்
  2. 1பெரிய சைஸ் வெங்காயம்
  3. ஒரு சின்ன சுந்தக்கை அளவு புளி
  4. தேவைக்குஉப்பு
  5. தாளிக்க
  6. 1ஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு
  7. 4பல்பொடியா நறுக்கின பூண்டு
  8. எண்ணெய், கறிவேப்பிலை
  9. 1/2 ஸ்பூன் வெல்லம்

சமையல் குறிப்புகள்

5நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு பவுலில் மிளகாயை முழுகும் அளவு வெந்நீர் விட்டு 2நிமிடம் ஊற விடவும்.. வெந்நீரில் ஊரினால் மிளகாய் சீக்கிரம் அரைப்படும்..

  2. 2

    ஒரு மிக்ஸியில் ஊற வைத்த மிளகாய், வெங்காயம், புளி, உப்பு, தண்ணி சேர்த்து நன்கு விழுதாக அரைத்து எடுத்துக்கவும்.வெங்காயத்தை பெரிய துண்டாக நறுக்கி க்கவும்.

  3. 3

    ஒரு வாணலி ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு போ ட்டு வறுத்து அத்துடன் பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக்கவும்

  4. 4

    அதில் அரைத்த மிளகாய் வெங்காய விழுதை சேர்த்து தேவையான தண்ணி விட்டு 5 நிமிடம் பச்சை மணம் போக கொதிக்க விடவும்.கடைசியில் வெல்லம் சேர்த்து ஸ்டவ்வ ஆப் செய்து விடவும்..

  5. 5

    மிக எளிமயாக சீக்கிரத்தில் செய்ய கூடிய கார சட்னி தயார்...தோசை, இட்லி, சப்பாத்தியுடனும், தயிர் சாதத்துடனும் தொட்டு சாப்பிட சூப்பரா இருக்கும்... குறிப்பு- தோசை, இட்லிவுடன் சாப்பிடும்போது கொஞ்சம் தண்ணியாகவும், தயிர் சாதத்துடன் கொஞ்சம் கட்டியாகவும் உபயகப்படுதினால் சுவை நன்றாக இருக்கும்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes