டோமினோஸ் ஸ்டைல் ஸ்வீட் கான் சீஸி கேப்ஸிகம் பீட்சா

#bakingday
இப்போதுள்ள இளம் தலைமுறையினரின் மிகவும் விருப்பமான தவிர்க்கமுடியாத உணவாக இருப்பது பீட்சா.கடைகளில் கிடைப்பது போலவே மிகவும் ருசியான பீட்சாவை நாமும் செய்யலாம் வாங்க
சமையல் குறிப்புகள்
- 1
பீட்சா செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் 250 கிராம் மைதா மாவை எடுத்துக் கொள்ள வேண்டும் அதில் ஒரு டேபிள்ஸ்பூன் இன்ஸ்டன்ட் ஈஸ்ட் மற்றும் அரை டேபிள்ஸ்பூன் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்
- 2
பிறகு அதனுடன் 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்து எல்லாவற்றையும் கையால் ஒரு முறை கலக்கிக் கொள்ளவேண்டும் பிறகு அதில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலக்கிவிட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்
- 3
மாவை நன்றாக அழுத்தி அழுத்தம் கொடுத்து பிசைய வேண்டும் 5 முதல் 10 நிமிடங்கள் வரை மாவு பிசைந்தால் தான் மாவு மிகவும் மிருதுவாக இருக்கும்
- 4
மாவு தயாரானதும் அதன் மேற்பரப்பில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எல்லா பக்கமும் படும்படி தடவி விட வேண்டும் அப்போதுதான் மாவு காயாமல் இருக்கும் தடவிவிட்டு ஒரு வெள்ளைத் துணி வைத்து மூடி ஒரு மணி நேரம் ஊற விட வேண்டும்
- 5
அடுத்து பீட்சா செய்வதற்கு நாம் பீட்சா சாஸ் தயாரிக்க வேண்டும் அதற்கு ஐந்து நன்றாக பழுத்த தக்காளிப் பழங்களை தண்ணீரில் அலசிவிட்டு சுடுதண்ணீரில் போட்டு வேகவிட வேண்டும் அதாவது அதனுடைய தோலை நாம் பிரித்து எடுக்கும் வரை வேக விட வேண்டும்
- 6
தக்காளிப் பழத்தின் தோல் விரிசல் ஆனவுடன் அடுப்பை அணைத்து விட்டு சிறிது நேரம் ஆறிய பிறகு அதன் தோலை நீக்கிவிட வேண்டும்
- 7
பிறகு ஐந்து பல் பூண்டை தோலுரித்து அலசி விட்டு பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும் அதேபோல் ஒரு பெரிய வெங்காயத்தை தோல் உரித்து விட்டு பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும் அதனுடன் நாம் தோல் உரித்து வைத்துள்ள தக்காளியையும் நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்
- 8
இப்போது ஒரு கடாயில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள பூண்டையும் வெங்காயத்தையும் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக வதக்க வேண்டும்
- 9
அடுத்து அதில் நாம் தோல் உரித்து நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து மூடி வைத்து 10 நிமிடம் வரை வேக விட வேண்டும்
- 10
10 நிமிடம் கழித்து 2 டேபிள்ஸ்பூன் ஒரெகனோ சேர்த்து ஒரு டேபிள் ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் 3 டேபிள்ஸ்பூன் டொமேட்டோ கெட்சப் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்
- 11
பிறகு மறுபடியும் மூடி போட்டு 5 நிமிடம் வேகவிட்டு ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனை ஒரு பேஸ்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்
- 12
100 கிராம் சீஸ் துருவலை எடுத்துக்கொள்ள வேண்டும் அதனுடன் மெலிதாக நறுக்கிய அரை பெரிய வெங்காயம் மெலிதாய் நறுக்கிய அரை கேப்ஸிகம் 50 கிராம் ஸ்வீட் கான் எடுத்துக்கொள்ள வேண்டும்
- 13
ஒரு மணி நேரம் கழித்து மாவு ஊறிய பிறகு திறந்து பார்த்தால் மாவு பிசைந்து வைத்ததை விட இரண்டு மடங்கு ஆகியிருக்கும் மறுபடியும் கைகளால் நன்றாக அழுத்தம் கொடுத்து இரண்டு நிமிடம் வரை பிசைய வேண்டும் அதிலிருந்து ஒரு உருண்டை மாவை எடுத்து சப்பாத்தி கல்லில் வைத்து சிறிதளவு மைதா மாவை தூவி தேய்க்கவேண்டும்
- 14
நாம் எந்த பிளேட்டில் பேக்கிங் செய்கிறோமோ அந்த அளவிற்கு வரும்படி மாவை விரித்துக் கொள்ள வேண்டும்
- 15
பேக்கிங் செய்ய தயாராக உள்ள பிளேட்டில் சிறிது வெண்ணையை தடவி தட்டு முழுவதும் படும்படி தடவ வேண்டும் பிறகு அதில் நாம் பிரித்து வைத்துள்ள மாவை எடுத்து தட்டில் வைக்க வேண்டும்
- 16
பிறகு மாவின் நடு நடுவே சிறு சிறு துளைகள் இடவேண்டும் பிறகு அதில் நாம் தயாராக வைத்துள்ள பீட்சா சாஸ் 2 டேபிள்ஸ்பூன் வைத்து எல்லா இடமும் படும்படி தடவ வேண்டும்
- 17
பிறகு அதற்கும் மேலே மயோனைஸ் சாஸ் 2 டேபிள்ஸ்பூன் அளவிற்கு எடுத்து எல்லா புறமும் படும்படி தடவ வேண்டும்
- 18
அதற்கு மேல் நாம் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை அங்கொன்றும் இங்கொன்றுமாக வைத்து அழகுபடுத்த வேண்டும் அதற்கு மேல் நாம் நறுக்கி வைத்துள்ள கேப்ஸிகம் அங்கொன்றும் இங்கொன்றுமாக வைத்து அழகுபடுத்த வேண்டும்
- 19
அதன் மேல் நான் வைத்துள்ள ஸ்வீட்கான் களை தூவி விட வேண்டும் அதற்குமேல் நாம் வைத்துள்ள சீஸ் துருவலை எல்லா புறமும் படும்படி சேர்க்க வேண்டும்
- 20
இதோ நான் தயாரித்திருக்கும் பீட்சா பேக்கிங்கிற்கு தயாராக இருக்கிறது பேக்கிங் செய்வதற்கு கனமான அடி உடைய ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தூள் உப்பு சேர்த்து அதன் மேல் ஒரு ஸ்டாண்ட் வைத்து 15 நிமிடம் வரை மிதமான சூட்டில் வைத்து பேக்கிங் செய்வதற்கு முன்னதாகவே சூடு படுத்திக் கொள்ள வேண்டும்
- 21
15 நிமிடம் ஆன பிறகு நாம் ரெடியாக வைத்துள்ள பீட்சா பிளேட்டை தண்டின் மேல் படும்படி வைக்க வேண்டும் வைத்து பாத்திரத்தை மூடி விட வேண்டும் சரியாக 25 நிமிடங்கள் பேக்கிங் செய்யவேண்டும் 25 நிமிடம் கழித்து திறந்து பார்க்கவும்
- 22
இதோ மிகவும் ருசியான பார்த்ததுமே சாப்பிடத் தோன்றும் நம் அனைவருக்கும் விருப்பமான ஸ்வீட் கான் சீஸி கேப்ஸிகம் பீட்சா தயார் வாங்க சுவைக்கலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

டோமினோஸ் ஸ்டைல் சீஸி கார்லிக் பிரட் (Cheesy Garlic Bread)


சீசி வெஜ் பீட்சா


சீஸி நாசோஸ் பீட்சா(cheesy nachos pizza recipe in tamil)


சீஸி சிக்கன் பீசா🧀🍕


ஸ்வீட் கார்ன் பீட்ஸா (Sweet corn pizza recipe in tamil)


கார்லிக் பிரெட்(garlic bread recipe in tamil)


லேஸ் பீசா(lays pizza recipe in tamil)


சீஸி வைட் சாஸ் பாஸ்தா(cheesy white sauce pasta)


ஸ்வீட் கார்ன் வெஜிடபிள் சாலட் (Sweetcorn vegetable salad recipe in tamil)


சீஸ் பண் (cheese bun recipe in tamil)


பீட்சா ரோல் (Pizza roll recipe in tamil)


மினி பிட்சா(mini pizza recipe in tamil)


மினி பீட்சா(mini pizza recipe in tamil)


சீஸ் வெஜ் பீட்சா(cheesy veg pizza recipe in tamil)


தாபா ஸ்டைல் ஸாப்ட் கார்லிக் பட்டர் நான்


ஸ்வீட் கான் வடை (Sweet corn Vada recipe in tamil)


மினி,தவா பிட்சா for kids(mini tawa pizza recipe in tamil)


சீஸி மேகி(cheesy maggi recipe in tamil)


சிக்கன் பீட்சா (Chicken pizza recipe in tamil)


பீட்சா(pizza recipe in tamil)


வெஜ் பீட்சா(veg pizza recipe in tamil)


கிறிஸ்பி கார்ன்(crispy corn recipe in tamil)


கோதுமை வெஜ் பீட்சா🍕


மினி பீட்சா உடன் உருளைக்கிழங்கு சிப்ஸ் (Mini pizza with urulaikilanku chips recipe in tamil)


🍮🥧 ☕ டல்கோணா கேக்🍮🥧☕


இத்தாலியன் பீட்சா (Italian pizza recipe in Tamil)


பசலைக்கீரை பீட்சா(Spinach pizza) (Pasalaikeerai pizza recipe in tamil)


சிக்கன் சூப்(chicken soup recipe in tamil)


ஸ்வீட் கார்ன் பேன் கேக் (Sweetcorn pancake recipe in tamil)


கார்லிக் பிரெட் (Garlic bread recipe in tamil) 🍞

கமெண்ட் (4)