சீஸ் பண் (cheese bun recipe in tamil)

Santhanalakshmi
Santhanalakshmi @santhanalakshmi
ஓசூர்

#book
#goldenapron3
சாப்ட் சுவீட் பண் சுலபமான முறையில் செய்யலாம் வாங்க.

சீஸ் பண் (cheese bun recipe in tamil)

#book
#goldenapron3
சாப்ட் சுவீட் பண் சுலபமான முறையில் செய்யலாம் வாங்க.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3 மணி நேரம்
3 பரிமாறுவது
  1. 1 கப் மைதா
  2. 1டேபிள்ஸ்பூன் டிரை ஈஸ்ட்
  3. ஒரு சிட்டிகைஉப்பு
  4. 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  5. 1/2 கப் பால்
  6. சீஸ் ஸ்லைசு
  7. எண்ணெய்
  8. பட்டர்
  9. 1 முட்டை

சமையல் குறிப்புகள்

3 மணி நேரம்
  1. 1

    டிரை ஈஸ்ட் இல் கொதித்த தண்ணீர், உப்பு, சர்க்கரை ஒரு டேபிள்ஸ்பூன் சேர்த்து 10 நிமிடம் வைக்கவும். படத்தில் காட்டியபடி நுறையாக வரும்.

  2. 2

    மைதாவில் பால் சேர்த்து சாப்ட் ஆக பிசைந்து கொள்ளவும். (பால் சூடகவோ அல்லது குளுமையாக இருக்க கூடாது. ரூம் டெம்ப்ரேசரில் இருக்க வேண்டும்). இதனை 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

  3. 3

    1 மணி நேரம் ஊறியதும் இரட்டிப்பாக மாறும். அதனை நடுவில் அழுத்தி பிசைந்து கொள்ளவும்.

  4. 4

    சிறிது மைதா மாவு சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

  5. 5

    ஒரு உருண்டையை தேய்த்து அதன் நடுவில் சீஸ் வைத்து மூடவும்.

  6. 6

    படத்தில் காட்டியபடி உருண்டையாக உருட்டி எடுத்து கொள்ளவும்.

  7. 7

    1 மணி நேரம் தனியாக எடுத்து வைக்கவும். இரட்டிப்பாக ஆனதும், மேலே முட்டையை ப்ரஷ் செய்யவும்.

  8. 8

    முன்பாகவே 180 டிகிரி செல்சியஸ் அளவில் 10 நிமிடம் ஒவனை சூடு செய்யவும். அதில் இந்த பண் உள்ளே வைத்து 180 டிகிரி செல்சியஸ் அளவில் 20 இல் இருந்து 25 நிமிடம் பேக் செய்யவும்.

  9. 9

    பேக் செய்து வெளியே எடுத்ததும் அதன் மேல் பட்டர் தடவவும். சுவையான சீஸ் பண் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Santhanalakshmi
Santhanalakshmi @santhanalakshmi
அன்று
ஓசூர்
செய்ய முடியாதது எதுவும் இல்லை
மேலும் படிக்க

Similar Recipes