கோஸ், காலிஃப்ளவர், உருளை வ்ரைட் சாதம்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

#combo5
சத்து சுவை ஏராளம். இது Indochinese. மன்சுரியன் முதல் தடவை செய்தேன் நல்ல காம்போ
#fried rice+Manchurian

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 1கப் பாஸ்மதி அரிசி
  2. ¼கப் நல்லெண்ணை
  3. 1கப் வெங்காயம், மெல்லியதாக நறுக்கியது
  4. 1/4கப் ஸ்பிரிங் ஆனியன்(spring onion bulb) மெல்லியதாக நறுக்கியது
  5. 2தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  6. 2பச்சைமிளகாய், நீளமாய் நறுக்கியது
  7. 1கப் கோஸ் மெல்லியதாக நறுக்கியது., ஷ்ரேடேட்(shredded)
  8. 2கப் உருளை, சின்ன துண்டுகள். நீராவியில் பாதி வேகவைத்து தோலுரித்தது
  9. 1கப் காலிஃப்ளவர்,மொக்குகள், நீராவியில் பாதி வேகவைத்தது
  10. 1மேஜைக்கரண்டி ஸ்பைஸ் மிக்ஸ்(தனியா, சீரகம்.வறுத்து பொடித்தது)
  11. 1தேக்கரண்டி சோய் சாஸ்
  12. 1தேக்கரண்டி சில்லி சாஸ் (விரும்பினால்)
  13. 1தேக்கரண்டி வெள்ளை மிளகு பொடி
  14. 1தேக்கரண்டி விநிகர்
  15. 1 மேஜைகரண்டி நெய்
  16. 1 மேஜைகரண்டி கொத்தமல்லி. பொடியாக நறுக்கியது
  17. 1/4கப் ஸ்பிரிங் ஆனியன் இலைகள், பொடியாக நறுக்கியது
  18. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க

  2. 2

    தேவையான பொருட்களை அருகில் வைக்க

  3. 3

    அரிசியை 4 கப் தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊறவைத்து வடிக்க. ஹை விலேமில் அடிகனமான பாத்திரத்தில் 6 கப் நீர் கொதிக்கவைக்க. கொதிக்கும் நீரில் உப்பு, 1 தேக்கரண்டி எண்ணை சேர்த்து வடித்த அரிசி சேர்த்து கிளற. கொதிக்கட்டும். நெருப்பை குறைத்து பாத்திரத்தை மூடி 7-8 நிமிடங்கள் வேக வைக்க. 70% வெந்தால் போதும். நீரை வடித்து விடுக,
    அரிசி வெந்து கொண்டிருக்கும் பொது காய்கறிகளை தயார் செய்க. ஹை விலேம் நெருப்பின் மீது ஒரு ஸ்கிலேட்டில் எண்ணை சேர்க்க. வெங்காயம், ஸ்பிரிங் ஆனியன், பச்சை மிளகாய் வதக்க.

  4. 4

    இஞ்சி பூண்டு விழ்து சேர்க்க. கோஸ் சேர்க்க. 3, நிமிடங்கள் வதக்க. மீதி காய்கறிகள் சேர்த்து கிளற. காய்கறிகள் நிறம் மாறாமல் இருக்க 1 தேக்கரண்டி சக்கரை சேர்க்க.. காய்கறிகள் கிரிஸ்ப் ஆக இருக்க வேண்டும். ஓவர் குக் செய்யாதீர்கள். சோய் சாஸ் (சில்லி சாஸ், விரும்பினால்) சேர்க்க. வெள்ளை மிளகு பொடி, ஸ்பைஸ் மிக்ஸ். விநிகர் சேர்க்க. வெந்த சாதம், உப்பு சேர்த்து மெதுவாக கிளற. சில நிமிடங்கள் கழித்து கிளறி அடுப்பை அணைக்க. மேலே நெய் சேர்த்து மெதுவாக கிளற.

  5. 5

    மேலே கொத்தமல்லி.ஸ்பிரிங் ஆனியன் இலைகள் தூவி அலங்கரிக்க.. ருசியான வ்ரைட் சாதம் தயார். ருசிக்க, மஞ்சூரியன் அல்லது வறுவல் கூட பரிமாறுக
    டிப்ஸ்: எண்ணை அதிகம் வேண்டும், சாதம் உதிரியாக இருக்கவேண்டும். சோய் சாஸ் அளவுடன் சேர்க்க. லைட் சோய் சாஸ் உபயோகிக்க. சாதம் காய்கறிகள் சமமாக இருக்க வேண்டும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes