தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
5 பேர்
  1. 1 கப் கோதுமை ரவா
  2. 3பெரிய வெங்காயம்
  3. 2காய்ந்த மிளகாய்
  4. சிறிதளவு கருவேப்பிலை
  5. தாளிக்க
  6. ஒரு ஸ்பூன் கடுகு
  7. இரண்டு ஸ்பூன் உளுந்து
  8. ஒரு ஸ்பூன் கடலை பருப்பு

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    தேவையான பொருள் எடுத்துக் கொண்டு அடுப்பைப் பற்றவைத்து, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுந்து, அரை ஸ்பூன் கடலைப்பருப்பு, சேர்த்து தாளிக்கவும்.

  2. 2

    அதில் வெங்காயம், காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

  3. 3

    கோதுமை ரவாவை அதில் சேர்த்து கட்டி படாமல் நன்றாக கிண்டவும்.பின்பு கோதுமை ரவாவை நன்றாக வேகவிடவும். அடுப்பை சிம்மில் வைத்து கடாயை மூடி வைக்கவும்.

  4. 4

    கோதுமை ரவாவை கிளறிவிட்டு தட்டில் பரிமாறவும் சத்தான கோதுமை ரவா ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010
அன்று

Similar Recipes