கோதுமை தோசை/Wheat Dosai (Kothumai dosai recipe in tamil)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

கோதுமை தோசை/Wheat Dosai (Kothumai dosai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15mins
2 பரிமாறுவது
  1. 1கப் கோதுமை மாவு
  2. உப்பு
  3. 1/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  4. சிறிதுசீரகம்
  5. தாளிக்க:
  6. 2டீஸ்பூன் ஆயில்
  7. 1/2டீஸ்பூன் கடுகு
  8. 1டீஸ்பூன் உளுந்து பருப்பு
  9. 1டீஸ்பூன் கடலை பருப்பு
  10. 1பெரிய வெங்காயம்
  11. 1பச்சை மிளகாய்
  12. சிறிதுகறிவேப்பிலை
  13. சிறிதுகொத்தமல்லி தழை

சமையல் குறிப்புகள்

15mins
  1. 1

    1கப் கோதுமை மாவை சலித்து மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்து விடவும்.

  2. 2

    தேவையான அளவு தண்ணீர் விட்டு அரைத்தவுடன் அதை 1 கிண்ணத்தில் சேர்த்து 1/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள், சிறிது சீரகம் சேர்த்து கலக்கி விடவும். 1 பெரிய வெங்காயம் தோல் நீக்கி கழுவி பொடியாக நறுக்கி விடவும். 1 பச்சை மிளகாய் கழுவி பொடியாக நறுக்கி விடவும். சிறிது கருவேப்பிலை கொத்தமல்லி தழை கழுவி அதையும் நறுக்கி வைக்கவும்.

  3. 3

    கடாயில் 2 டீஸ்பூன் ஆயில் விட்டு 1/2 டீஸ்பூன் கடுகு, 1 டீஸ்பூன் உளுந்து பருப்பு,1 டீஸ்பூன் கடலை பருப்பு தாளித்து நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சைமிளகாய் கொத்தமல்லி தழை கறிவேப்பிலையை சேர்த்து நன்கு வதக்கி விடவும். வதக்கியதை கோதுமை மாவில் சேர்த்து கலந்து விடவும்.

  4. 4

    தோசைக்கல்லை சூடாக்கி உடன் 1 கரண்டி மாவை எடுத்து தோசைக்கல் விளிம்பிலிருந்து நடுவே ஊற்றவும். கோதுமை மாவை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்ததால் கோதுமை தோசை கல்லில் ஒட்டாமல் திருப்பி போடுவதற்கு சுலபமாக வரும். ட்ரை செய்து பாருங்கள்.இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.

  5. 5

    சுவையான கோதுமை மாவு தோசை ரெடி😋😋 கோதுமை தோசை தொட்டு சாப்பிட பொட்டுக்கடலை சட்னி,எள்ளு பொடி நல்லெண்ணெயுடன் வைத்து பரிமாறினேன். மிகவும் சுவையாக இருந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes