தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
6 பேர்
  1. 120கி பச்சரிசி (நான் சம்பா பச்சரிசி எடுத்து உள்ளேன்)
  2. 60கி பாசிப்பருப்பு
  3. 250கி வெல்லம்
  4. தேவையானஅளவுமுந்திரி, திராட்சை, ஏலக்காய்
  5. 2டீஸ்பூன் தேங்காய் ‌துருவல்
  6. தேவையானஅளவுநெய்
  7. தேவையானஅளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    குக்கர் இல் பாசி பருப்பை சேர்த்து, சிறு தீயில் வைத்து வறுத்து கொள்ளவும். அதனுடன் பச்சரிசி சேர்த்து நன்றாக கழுவி கொள்ளவும்.

  2. 2

    அரிசி பருப்பின் அளவைக் கொண்டு 4 மடங்கு தண்ணீர் சேர்க்கவும் (1 கப் அரிசி,1/2 கப் பருப்பு எனில் 6 கப் தண்ணீர் சேர்க்கவும்)

  3. 3

    முந்திரி, திராட்சை யை இதனுடன் சேர்த்து 1டீஸ்பூன் நெய் சேர்க்கவும்.
    (நங்கள் அதிகமாக நெய் சேர்க்க மாட்டோம்.அரிசி, பருப்பு வேக வைக்கும் போது நெய் சேர்த்தால் முடிவில் ரொம்ப நெய் வாசம் வராது. ம‌ற்று‌ம் பொங்கல் வெகு நேரம் குழைவாக இருக்கும்)

  4. 4

    5 விசில் விட்டு இறக்கவும்.

    நாம எடுத்து கொண்ட அரிசி பருப்பின் அளவை விட அரை கப் அதிகமாக வெல்லம் எடுத்து கரைத்து, வடிகட்டி வைக்கவும்.

  5. 5

    இப்பொழுது ஸ்டவ்-ல்,சிறு தீயில், குக்கர் வைத்து பொங்கல் -ல்
    கரைத்து வைத்துள்ள வெல்லம் சேர்க்கவும்

  6. 6

    கடைசியாக தே‌ங்கா‌ய் துருவல் ம‌ற்று‌ம் ஏலக்காய்- ஐ பொடி செய்து சேர்த்து கிளறவும்.

  7. 7

    நெய் பிரியர்கள் இப்பொழுது சிறிது நெய் சேர்க்கலாம். மற்றும் முந்திரி, திராட்சை யை நெய்யில் வறுத்து சேர்க்கலாம்.

  8. 8

    சுவையான சர்க்கரை பொங்கல் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes