சமையல் குறிப்புகள்
- 1
தேங்காய் துருவலை அரைத்து அரை கப் கெட்டியான பால் எடுக்கவும்.
- 2
சக்கையை மேலும் அரைத்து இரண்டாவது பால் இரண்டு கப் எடுத்து அதில் புளியை ஊற வைத்து கரைத்து வடிகட்டி தனியே வைக்கவும்.
- 3
மிக்சியில் மிளகு. சீரகம். சோம்பு. சி வெங்காயப். பூண்டு சேர்த்து கொர கொரப்பாக ஒரு சுற்று சுற்றி எடுத்து வைக்கவும்.
- 4
கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் ப. மிளகாய் கீறி சேர்த்து வதக்கி அதில் கொர கொரப்பாக அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.
- 5
அதில் ம. தூள் உப்பு சேர்த்து கிளறி இரண்டாவது பாலில் கரைத்த புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.
- 6
பிறகு முதல் பால் கெட்டியான பாலை ஊற்றி கொதிக்க விடாமல் சூடேறியதும் கறிவேப்பிலை மல்லி தூவி இறக்கவும்.
- 7
சூடான சாதத்தில் இந்த தேங்காய் பால் ரசம் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
More Recipes
கமெண்ட்