சால்னாமசாலாரசம்(இமியுனிட்டியை கூட்டும்ரசம்)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரைமணிநேரம்.
4 பேர்கள்
  1. பெரிய நெல்லிகாய் அளவுபுளி-
  2. கால்ஸ்பூன்சீரகம்-
  3. கால்ஸ்பூன்மிளகு-
  4. 1பட்டை -
  5. கால்ஸ்பூன்பெருஞ்சீரகம்(சோம்பு) -
  6. 1 சிட்டிகைஜாதிக்காய்பவுடர்-
  7. 2கிராம்பு -
  8. 1ஏலக்காய் -
  9. 1தக்காளி -
  10. சின்னதுண்டுஇஞ்சி -
  11. 4 பல்பூண்டு-
  12. 2பச்சை மிளகாய்-
  13. 2 கொத்துகருவேப்பிலை-
  14. கொஞ்சம்மல்லி இலை-
  15. 1 ஸ்பூன்எண்ணெய்-
  16. கடுகு,உளுந்தம்பருப்பு,
  17. பெருங்காயம்
  18. 2வரமிளகாய்-
  19. 1 சிட்டிகைமஞ்சள் பொடி-

சமையல் குறிப்புகள்

அரைமணிநேரம்.
  1. 1

    முதலில்எல்லாசாமான்களையும் எடுத்துவைத்துக் கொள்ளவும்வைத்துக்கொண்டால்கால்மணிநேரத்தில்ரசம் தயார்.

  2. 2

    புளியைகரைத்துவடிகட்டிவைக்கவும்.இஞ்சிபூண்டுபச்சை மிளகாய்இடித்துவைக்கவும்அதனுடன்மிளகுசீரகம்சேர்த்து கொரகொரப்பாகஇடித்துவைக்கவும்.

  3. 3

    பட்டை,சோம்பு,கிராம்புஏலக்காய்,ஜாதிக்காய்தூளாக்கிக் கொள்ளவும்.தக்காளியைபிசைந்துவைத்துக்கொள்ளவும்

  4. 4

    வடித்தபுளி தண்ணீரில்இடித்தபொருட்கள்,பொடித்தபொருட்கள்,தக்காளிமசித்தது.இவைகளைபோட்டுகலக்கிவைக்கவும்.மஞ்சள்பொடியையும்சேர்த்து விடுங்கள்

  5. 5

    அடுப்பில்வாணலியை வைத்து எண்ணெய்கொஞ்சம்விட்டு கடுகு,உளுந்து,கருவேப்பிலை,வரமிளகாய்,பெருங்காயம் போட்டுபொரிந்ததும்கரைத்தரசத்தைஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.ரசத்தைகொதிக்கவிடக்கூடாதுஎன்பார்கள்இந்த ரசத்தை கொதிக்கவிடலாம்.மணமூட்டிகள் சத்துக்கள்எல்லாம் ரசத்தில் கலக்க வேண்டும்.அப்போது தான் ரசம் நன்கு மணக்கும்..

  6. 6

    நன்குகொதித்ததும் பாத்திரத்தில்மாற்றி மல்லி தழை உப்பு சேர்க்கவும்நல்ல மணமுண்டு.ருசிரொம்ப நன்றாகஇருக்கும்.

  7. 7

    ரசம் ஊற்றியசாதம் முட்டை நல்லகாம்பினேஷன்.தொண்டைக்கு இதமளிக்கும்,கரகரப்பைபோக்கும்.சூப் மாதிரி குடிக்கலாம்.lovely Rasam.எல்லாபொருட்களும் மருத்துவ குணமுள்ளது.சைவக்காரர்கள் சிப்ஸ்,உருளை ரோஸ்ட்வைத்துசாப்பிடலாம்.இருமலைக் குறைக்கும்.

  8. 8

    புத்துணர்ச்சிரசம் ரெடி.🙏😊நன்றி மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes