தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 3தக்காளி
  2. புளி எலுமிச்சை அளவு
  3. தேவையான அளவுஉப்பு
  4. ஒரு டீஸ்பூன் மிளகு
  5. ஒரு தேக்கரண்டிசீரகம்
  6. 4 பல்பூண்டு
  7. சிறிதளவுகொத்தமல்லி இலை
  8. 2வர மிளகாய்
  9. சிறிதளவுபெருங்காயத்தூள்
  10. 2பச்சை மிளகாய்
  11. சிறிதளவுமஞ்சள் தூள்
  12. சிறிதளவுகருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    பூண்டு சீரகம் மிளகு எடுத்துக்கொள்ளவும்.

  2. 2

    அதனுடன் பச்சை மிளகாய் சேர்த்து மிக்சியில் ஒரு சுத்து சுத்தி எடுக்கவும்.

  3. 3

    3 தக்காளி அரைத்து வைத்துக் கொள்ளவும். அதனுடன் புளிச்சாறு பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    சிறிதளவு மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.ஒரு வானலியில் எண்ணெய் ஊற்றவும்.

  5. 5

    வரமிளகாய் கறிவேப்பிலை பெருங்காயத்தூள் சேர்க்கவும்.

  6. 6

    கலவையை ஊற்றி கொதி வரும் போது இறக்கி கொத்தமல்லி தூவி இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Nithyakalyani Sahayaraj
அன்று
Coimbatore

Similar Recipes