வெற்றிலை ரசம்

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

வெற்றிலை ரசம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20mins
2 பரிமாறுவது
  1. 2வெற்றிலை
  2. 1கப் துவரம் பருப்பு வெந்த தண்ணீர்
  3. 1எலுமிச்சை அளவு புளி
  4. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  5. 1டீஸ்பூன் ரசப்பொடி
  6. உப்பு
  7. 1தக்காளி
  8. 7பல் பூண்டு
  9. சிறிதளவுகறிவேப்பிலை
  10. தாளிக்க:
  11. 1டீஸ்பூன் ஆயில்
  12. 1/2டீஸ்பூன் கடுகு, சீரகம்
  13. சிறிதளவுபெருங்காயம்

சமையல் குறிப்புகள்

20mins
  1. 1

    2 வெற்றிலையை கழுவி எடுத்து வைக்கவும்.7 பல் பூண்டை தோல் நீக்கி தட்டி எடுத்து எலுமிச்சை அளவு புளியை கழுவி தண்ணீரில் ஊற விடவும்.

  2. 2

    கடாயில் 1 டீஸ்பூன் ஆயில் விட்டு, 1/2 டீஸ்பூன் கடுகு, 1/2 டீஸ்பூன் சீரகம், சிறிதளவு பெருங்காயம், 7 பல் பூண்டு தாளித்து, 1 வெற்றிலையை கிள்ளி சேர்த்து நன்கு வதக்கி விடவும். துவரம் பருப்பை வேக வைத்து 1கப் தண்ணீரை வடித்து எடுத்து வைக்கவும். ரச பொடியை எடுத்து வைக்கவும்.

  3. 3

    வெற்றிலையும், பூண்டும் நன்கு வதங்கியவுடன் வெந்த பருப்பு தண்ணீரை சேர்க்கவும். அதனுடன் 1 டீஸ்பூன் ரசப்பொடி, 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கி விடவும்.

  4. 4

    1 தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். புளியை கரைத்து 1/2 கப் எடுத்து வைக்கவும். கொதிக்கும் பருப்பு தண்ணீரில், தக்காளியையும் புளி தண்ணீரையும் கரைத்து சேர்க்கவும்.

  5. 5

    நன்கு கொதிக்க விடவும். கொதி வந்து இறக்கியவுடன், மேலும் 1 வெற்றிலையை கிள்ளி சேர்த்து விடவும். சிறிதளவு கறிவேப்பிலை சேர்க்கவும்.

  6. 6

    சுவையான மருத்துவ குணம் மிக்க வெற்றிலை ரசம் ரெடி.😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes