எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடங்கள்
  1. 5கற்பூரவள்ளி இலைகள்
  2. 5துளசி இலைகள்
  3. 5புதினா இலைகள்்
  4. 3தூதுவளை இலைகள்
  5. தேவையான அளவுகறிவேப்பிலை
  6. தேவையான அளவுமல்லி இலை
  7. 1டீஸ்பூன் சீரகம்
  8. 1/2டீஸ்பூன் மிளகு
  9. 5சாம்பார் வெங்காயம்
  10. 5பல் பூண்டு
  11. 1டேபிள் ஸ்பூன் புளி பேஸ்ட்
  12. கல் உப்பு
  13. தாளிக்க:
  14. 1டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  15. 1/4டீஸ்பூன் கடுகு
  16. வெங்காயம், பூண்டு
  17. பெருங்காயத்தூள்

சமையல் குறிப்புகள்

15நிமிடங்கள்
  1. 1

    மூலிகை கலவை ரசம் செய்ய தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.

  2. 2

    புளி பேஸ்ட் தயார் செய்து வைக்கவும்.

  3. 3

    மிக்ஸி ஜாரில் மிளகு,சீரகம், கற்பூரவள்ளி,புதினா,துளசி, மல்லி இலை, தூதுவளை, கறிவேப்பிலை,வேப்பிலை எல்லாம் சேர்த்து, கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.

  4. 4

    அரைத்த கலவை,புளி பேஸ்ட் சேர்த்து கலந்து தயாராக வைத்துக்கொள்ளவும்.

  5. 5

    வாணலியை ஸ்டவ்வில் வைத்து தேங்காய்
    எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை,துளசி, கற்பூரவல்லி,மல்லி இலை,வெங்காயம்,பூண்டு எல்லாம் சேர்த்து வதக்கி, கொஞ்சம் பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும்.

  6. 6

    பின்னர் கலந்து தயாராக வைத்துள்ள ரசக்கலவையை சேர்க்கவும்.

  7. 7

    பின்னர் அதில் கல் உப்பு சேர்க்கவும்.

  8. 8

    எல்லாம் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதித்து பச்சை வாசம் போனதும் இறக்கி பரிமாறும் பௌலில் சேர்க்கவும். எல்லா இலைகளையும் போட்டு அலங்கரிக்கவும்.

  9. 9

    இப்போது மிகவும் சுவையான சத்தான,ஆரோக்கியமான மூலிகை கலவை ரசம் சுவைக்கத்தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes