குஷ்பு இட்லி, பொடி இட்லி

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

#vattaram #COLOURS1
சாஃப்ட் குண்டு மல்லி போல இட்லி.கார சாரமான பொடி இட்லி. சுவையான சத்தான என் இட்லி பொடி-பருப்புகள், நட்ஸ், மிளகு, எள், பிளாக்ஸ் சீட்ஸ் சேர்ந்த பொடி. காரம் கூட சத்துக்கள் வேண்டும். சின்ன பசங்களும் இந்த சுவை சத்து நிறைந்த பொடியை விரும்புவார்கள். காரம் அறுசுவையில் ஒன்று. நோய் எதிர்க்கு சக்தி கொண்டது

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

60 நிமிடங்கள்
8 பரிமாறுவது
  1. இட்லி செய்ய:
  2. 4கப் இட்லி அரிசி
  3. ½கப் ஜவ்வரிசி
  4. 1தேக்கரண்டி வெந்தயம்
  5. 1கப் முழு உளுந்து
  6. தேவையான அளவு உப்பு
  7. 1 மேஜை கரண்டி ஈஸ்ட்
  8. தேவையான அளவு எண்ணை
  9. ஸ்டாக் பொடி
  10. 2 மேஜைகரண்டி நல்லெண்ணை
  11. ½கப் உளுந்து
  12. ½கப் கடலை பருப்பு
  13. 1 மேஜைகரண்டி மிளகு
  14. ½கப் வேர்க்கடலை (ஆப்ஷனல்)
  15. ¼கப் வால்நட் (ஆப்ஷனல்)
  16. ¼கப் பாதாம் (ஆப்ஷனல்)
  17. 1கப் மிளகாய் பொடி (2கப் வரமிளகாய்)
  18. 1 மேஜைகரண்டி பெருங்காய பொடி
  19. ½கப் எள்
  20. ¼கப் கடுகு
  21. 2மேஜைகரண்டி பூண்டு பொடி (விரும்பினால்)
  22. ½கப் வ்லேக்ஸ் (flax seeds (do not have to roast)
  23. தேவையான அளவு உப்பு

சமையல் குறிப்புகள்

60 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை சேகரிக்க. சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க

  2. 2

    தேவையான பொருட்களை சேகரிக்க. சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க

  3. 3

    இட்லி செய்ய
    அரிசியை தனியாகவும், உளுந்துடன் வெந்தயம் சேர்த்து தனி தனியாக நிறைய தண்ணீரில் ஊறவைக்க. ஜவ்வரிசி தனியாக நிறைய தண்ணீரில் ஊறவைக்க. 8 மணி நேரம் ஊற வைக்க. நான் ஓவர் நைட் ஊற வைத்தேன்,
    இட்லி கிரைண்டரில் முதலில் வெந்தயம் + உளுந்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அறைக்க. வெண்ணை போல சாஃப்ட், சில்கி இருக்க வேண்டும் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்க.
    ஊறவைத்த அரிசி ஜவ்வரிசி கலைந்து வடித்து நீர் சேர்த்து மழ மழ வென்று அறைத்து அறைத்த உளுந்துடன் சேர்க்க. சுத்தமான கையால் கலந்து கொள்ளுக.

  4. 4

    இட்லி பதத்திர்க்கு மாவை தயார் செய்க. ஈஸ்ட் சேர்த்து உஷ்ணமான இடத்தில் வைத்தால் 4 மணி நேரத்தில் பொங்கிவிடும். ஈஸ்ட் சேர்க்காவிட்டால் ஓவெர்நைட் புளிக்க வைக்க,
    பொங்கின மாவை கிளராதீர்கள்.எப்பொழுதும் இட்லி செய்வது போல மாவை இட்லி தட்டு குழிகளில் எண்ணை தடவி ஊற்றுக. முழுக்க நிறப்பாதிர்கள். ஹை விலேம் (HIGH FLAME) உபயோகப்படுத்துக.. இட்லி குக்கரில் போதுமான நீர் வைத்து மூடி கொதிக்க வைக்க. பின் இட்லி ஸ்டேண்டை குக்கர் பாத்திரத்தில் வைத்து, இட்லிகளை நீராவியில் வேகவைக்க.

  5. 5

    5-8 நிமிடங்களில் வெந்த வாசனை வரும்.
    வெந்தவுடன் வெளியே எடுத்து ஆறவைக்க. பஞ்சு போல மெத்தென்று சுவையாக இருக்கும். வெந்த இட்லிகளை பட்டர் கத்தியால் எடுத்து வேறொரு பாத்திரத்தில். போடுக மொத்தம் 24 இட்லிகள்.
    ருசி பார்க்க. சாம்பார், சட்னி, அல்லது இட்லி பொடி கூட பரிமாறுக

  6. 6

    பொடி செய்ய: ப்ரபோர்ஷன் (Proportion) கவனத்தில் வைத்துகொண்டு அதிகமாகவோ அல்லது குறைவான அளவு பொடி செய்க.
    மிதமான நெருப்பை வறுக்க உபயோகிக்க. மிதமான நெருப்பின் மேல் வாணலியில் சூடான எண்ணையில் எல்லா பொருட்களையும் (கடுகு, எள், மிளகாய் பொடி, பிளாக்ஸ் தவிர) தனி தனியாக ஒவ்வொன்றாக சேர்த்து வறுக்க. வறுந்ததும் ஒரு தட்டில் போடுக, காரம் உங்கள் விருப்பம் போல அட்ஜஸ்ட் செய்க. நான் மிளகாய் பொடியையும் பெருங்காய பொடியையும் வறுத்த பொருட்களோடு சேர்ப்பேன். அந்த சூடே போதும். பெருங்காய வாசனை எனக்கு மிகவும் பிடிக்கும்.

  7. 7

    உங்களுக்கு இஷ்டம் இல்லாவிட்டால் அளவை குறைக்கலாம். ஆனால் கட்டாயம் பெருங்காயம் சேர்க்க ஆறின பின் மிக்ஸியில் கொற கொறப்பாய் பொடி செய்க. வர மிளகாய் உபயோகித்தால் முதலில் அதை பொடி செய்க.
    மிதமான நெருப்பின் மேல் கடுகு, எள் ரோஸ்ட் செய்க. வெடிக்கும் ; அடுப்பை அணை0த்து ஆறவைக்க. ஆறின பின் மிக்ஸியில் பொடி செய்க எல்லா பொடிகளையும், கூட பூண்டு பொடி, வ்லேக்ஸ். உப்பு சேர்த்து கலந்து கொள்ளுக. ஒரு பாத்திரத்தில் பொடிகளை ஆறவைக்க. சூடான பொடிகளை மூடக்கூடாது. பின் காற்று புகாத (air tight) கண்டைனைரில் சேமிக்க

  8. 8

    பொடி இட்லி செய்ய
    1கப் பொடியுடன் ½ கப் நல்லெண்ணை கலந்து கொள்ளுங்கள். இட்லியை அதில் மூழ்க வைத்து, 2 பக்கமும் நல்ல சிகப்பு கோட்டீங் வரட்டும் பொடி இட்லி தயார் சுவைக்க

எடிட் ரெசிபி
See report
ஷேர்

கமெண்ட் (2)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Mam, ஜவ்வரிசி சேர்ப்பதால்,வழக்கம் போல் மாவை, 3நாட்களுக்கு பயன்படுத்த முடியுமா?
(எடிட்டட்)

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes